உத்தரப் பிரதேச மாநிலம் பாக்நாத்தில் கண்டேரா கிராமத்தைச் சேர்ந்த சன்னி குமார், கடந்த ஆண்டு கர்ஹி கங்க்ரான் கிராமத்தைச் சேர்ந்த அங்கிதாவை மணந்தார். ஆனால் அங்கிதா, அய்யூப் அகமது என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இந்த மாதம் 22 ஆம் தேதி, கன்வார் புனித யாத்திரையின் ஒரு பகுதியாக கங்கை நீர் கொண்டு வர சன்னி பைக்கில் ஹரித்வாருக்குச் சென்றார். இருப்பினும், காங்க்ரான் கிராம சாலை அருகே சன்னியின் பைக்கை நான்கு பேர் நிறுத்தி அவரைத் தாக்கினர்.

பின்னர், அவர் அங்கிதாவின் பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, சன்னி பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டார். பலத்த காயமடைந்த சன்னி உள்ளுர்வாசிகளால் மீட்கப்பட்டு மீரட்டில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்குள்ள மருத்துவர்கள் அவரை டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.அங்கு சன்னி சிகிச்சை பலனின்றி உயிரிழநதார்.

சன்னியின் தந்தை வேத்பாலின் புகாரின் அடிப்படையில், அங்கிதா, அய்யூப், பேபி மற்றும் சுஷில் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். “,

Share.
Leave A Reply