ஜூலை மாத நடுப்பகுதியில் பொதுமக்களை போராளிகளுடன் வித்தியாசப்படுத்தி பார்க்காத காசாவின் சுகாதார அமைச்சு யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களின் பெயர்களையும் வயதினையும் வெளியிட்டது.
காசாவின் சுகாதார அமைச்சின் பட்டியல் மாத்திரமே கொல்லப்பட்டவர்கள் குறித்த உத்தியோகபூர்வமான ஆவணம்.
மிக நீண்ட இந்த ஆவணத்தில் சிறுவர்களின் பெயர்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன.900க்கும் அதிகமானவர்கள் தங்கள் முதலாவது பிறந்த நாளிற்கு முன்னர் கொல்லப்பட்டவர்கள்.
இஸ்ரேல் பொதுமக்களின் உயிரிழப்பினை குறைக்க முயல்வதாக தெரிவிக்கின்றது.
ஹமாசின் உறுப்பினர்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் செயற்படுகின்றனர் என இஸ்ரேல் தெரிவிக்கின்றது, மருத்துவமனைகள், வீடுகள், பாடசாலைகள் இடம்பெயர்ந்தவர்களிற்கான முகாம்களை இலக்குவைப்பதை நியாப்படுத்துவதற்கு இஸ்ரேல் கூறும் காரணம்.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ஹமாசின் பிரசன்னத்தை காரணம் காட்டி பொதுமக்களை பெருமளவில் கொல்லும் இஸ்ரேலின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது என ஐக்கிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் தெரிவிக்கின்றன.
ஒக்டோர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட பயங்கரமான தாக்குதலை நான் மீண்டும்மீண்டும் கண்டித்துவந்துள்ளேன் என தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ஆனால் மிகப்பெருமளவு உயிரிழப்புகளையும் அழிவையும் எவற்றாலும் நியாயப்படுத்த முடியாது,சமீபகாலத்தில் நாங்கள் சந்தித்த எதனையும் விட இழப்புகள் அளவில் மிகப்பெரியவை என அவர் தெரிவித்துள்ளார்.
சிலர் உறக்கத்தில் படுக்கையில் கொல்லப்பட்டார்கள், சிலர் விளையாடிக்கொண்டிருந்தவேளை கொல்லப்பட்டார்கள்.பலர் தாங்கள் நடைபழகுவதற்கு முன்னரே புதைக்கப்பட்டார்கள்.
உலகிலேயே சிறுவர்களிற்கு மிகவும் ஆபத்தான இடம் காசா என ஐக்கியநாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவிக்கின்றது.
யுத்தத்தின் போது பாலஸ்தீன சிறுவர்கள் ஒரு மணித்தியாலத்திற்கு ஒருவருக்கும் அதிகம் என்ற அளவில் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒரு வகுப்பில் நிறைந்திருக்கும் மாணவர்கள் இரண்டு வருடங்களாக ஒவ்வொரு நாளும் கொல்லப்படுவதை நினைத்து பாருங்கள் என யுனிசெவ்வின் நிறைவேற்று இயக்குநர் கதரின் ரசல் இந்த மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தெரிவித்தார்.
சிறுவர்கள் உயிரிழப்பு குறித்து கேட்டவேளை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தாங்கள் சிறுவர்களையும் போரில் நேரடி தொடர்பற்றவர்களையும் இலக்குவைக்கவில்லை என தெரிவித்தது.பொதுமக்களிற்கு பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக நாங்கள் நடவடிக்கைகளை எடுக்கின்றோம்,சர்வதேச சட்டங்களை பின்பற்றியே இஸ்ரேலிய இராணுவம் செயற்படுகின்றது என அவர்கள் தெரிவித்தனர்.
போரின்; போது கொல்லப்பட்டவர்களின் பட்டியை தயாரிப்பதற்கு காசாவின் சுகாதார அமைச்சு மருத்துவமனை மற்றும் பிரேத அறை தகவல்களை பயன்படுத்துகின்றது. கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஊடகங்களின் தகவல்களை ஆராய்ந்து அவற்றையும் சேர்த்துக்கொள்கின்றது.காசாவின் மருத்துவ கட்டமைப்பு முற்றாக சிதைந்துபோயுள்ளதால் உயிரிழந்தவர்கள் குறித்த விபரங்களை பெறுவது மிகவும் கடினமான விடயம்.
ஒவ்வொரு மரணத்தையும் பதிவு செய்வது சாத்தியமற்றது என்றாலும் காசாவின் சுகாதார அமைச்சு வழமைக்கு மாறான உயர்தர உடனடி இறப்பு பதிவினை மேற்கொள்கின்றது என லண்டன் பல்கலைகழகத்தின் பொருளியல் பேராசிரியர் மைக்கல் ஸ்பகட் தெரிவிக்கின்றார்.
இவர் ஆயுதமோதல்களின் உயிரிழப்புகளை பதிவு செய்யும் சர்வதேச அமைப்பின் உறுப்பினராக உள்ளார்.
காசாவின் சுகாதார அமைச்சு உயிரிழப்புகள் பதிவினை மிகவும் கவனமாகவும் கடுமையான விதத்திலும் முன்னெடுக்க முயல்கின்றது என அவர் தெரிவிக்கின்றார்.
காசாவின் சுகாதார அமைச்சு ஜூலை 15ம் திகதி வெளியிட்ட புள்ளிவிபரங்களை ஆராய்ந்த வோசிங்டன் போஸ்ட் அவற்றை வயதின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தியது.
மொவீன் சுகைல்பருக்கு ஆறு வயது அவன் எதிர்காலத்தில் யுத்தத்தில் காயமடைந்த சிறுவர்களிற்கு சிகிச்சை வழங்கும் சிறுவர்கள் நல மருத்துவராக வரவிரும்பினான்.ஆடம்பர கார்களை வைத்திருக்கும் வர்த்தகராகவும் வர ஆசைப்பட்டான், உறவினர்களை பொறுத்தவரை அவன் வயதிற்கு மீறிய முதிர்ச்சியும் சிந்தனையும் உடைய ஒருவன்.
நவம்பர் 2023 இல் தொடர்மாடியொன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலில் இவன் கொல்லப்பட்டான், அந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர் என அந்த சிறுவனின் உறவினரான அட்காம் சுகேபெர் தெரிவித்தார்.
அவன் தனது காதுகளை மூடிக்கொண்டே தனது இறுதி மூச்சை விட்டான் என நான் நினைக்கின்றேன் ஏன் என்றால் விமானங்களின் சத்தத்தை கேட்கும் ஒவ்வொரு தடவையும் அவன் அவ்வாறே செய்வான் என சுகேபெர் தெரிவித்தார்.
மேலும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் தங்கள் வாழ்க்கையையே முற்றாக மாற்றியுள்ள காயங்களை சந்தித்துள்ளனர்.
காசாவில் பல மருத்துசேவையில் தொண்டராக ஈடுபட்ட அமெரிக்காவை சேர்ந்த சத்திரசிகிச்சை நிபுணர் சமெர் அட்டெர் தான் அடையாளம் காணமுடியாதபடிகருகிய சிறுவர்களின் உடல்களை பார்த்துள்ளதாக தெரிவிக்கின்றார்.
ஏனையவர்கள் அங்கங்களை இழந்துள்ளனா அல்லது தலையில் கடும் அதிர்ச்சியை சந்தித்துள்ளனர் என தெரிவித்த அவர் ‘இந்த காயங்கள் உடல்ரீதியாக செயல் இழக்கச்செய்பவை, உணர்வுரீதியாக பெரும் அச்சத்தை ஏற்படுத்துபவவை” என தெரிவித்தார்.
ஏப்பிரல் மாதத்தின் ஆரம்பத்தில் காசா நகரத்தில் உள்ள மருத்துமவனையில் தாக்குதலொன்றின் பின்னர் பெருமளவு நோயாளர்கள் தரையில் காணப்படுவதை பார்த்ததை நினைவுகூர்ந்தார் அத்தார்,
அந்த மருத்துவமனையில் நோயாளர்களிற்கான படுக்கை வசதிகள் முற்றாக தீர்ந்துவிட்டன. 30 வயது நோயாளியின் வாய் மூக்குதுவாரத்திலிருந்து குருதி வெளியேறிக்கொண்டிருந்ததையும் அவர் தனது இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருந்ததையும் பார்த்தாக குறிப்பிட்ட அத்தார்,
ஒரு சிறுவனி மண்டையோடு பிளந்திருந்தது வயிற்றிலும் பெரும் காயங்கள்,அந்த சிறுவனிற்கு அருகிலிருந்த அவனது இரண்டு சகோதாரர்கள் சிறுவனை காப்பாற்றுமாறு மன்றாடிக்கொண்டிருந்தார்கள்,
நான் அவர்களில் ஒருவரின் கரத்தை இறந்துகொண்டிருந்த சிறுவனின் கரங்களில் எடுத்துவைத்தேன் மற்றைய சிறுவனின் கரத்தினை அந்த சிறுவனின் நெஞ்சில் எடுத்துவைத்துவிட்டு மன்னிக்கவேண்டும் அவன் இறக்கப்போகின்றான் அவனது உயிர் பிரியும் வரை இங்கே இருங்கள் என தெரிவித்தேன் என நினைவுகூர்ந்த அத்தார் தான் காயப்பட்ட மற்றைய நோயாளியை பார்க்க சென்றதாக குறிப்பிட்டார்.
ஜூலை 13ம் திகதி மத்திய காசாவில் குடிநீரை சேகரிப்பதற்காக நின்றிருந்தவர்கள் மீது இஸ்ரேல் வான்தாக்குதலை மேற்கொண்டது, பத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் அனேகமானவர்கள் சிறுவர்கள்.
இந்த தாக்குதலுக்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என தெரிவித்த இஸ்ரேலிய இராணுவம் வெடிபொருள் இலக்கிலிருந்து சற்று தொலைவில் விழுந்தது என குறிப்பிட்டது.
தாகத்துடன் நீர் எடுக்கப்போன சிறுவர்கள் உயிரற்ற சடலங்களாக தங்கள் வீடுகளிற்கு திரும்பினார்கள் என அந்த பகுதியில் வசிக்கும் சம்பவத்தை நேரில் பார்த்த ரமடான் நசார் தெரிவித்தார்.
Published By: Rajeeban
தமிழில் – ரஜீவன்