உக்ரைனின் விசேட படைப்பிரிவினர் மேற்கொண்ட தாக்குதலொன்றில் 330 ரஸ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என உக்ரைனின் பாதுகாப்பு புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

உக்ரைனின் விசேட படைப்பிரிவான டிமுர் எதிரிகளின் நிலைகளிற்குள் ஊருடுவி மேற்கொண்ட தாக்குதலில் விளாடிமிர் புட்டினின் பெருமளவு படையினரை கொன்றுள்ளனர் என உக்ரைனின் பாதுகாப்பு புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இருதரப்பும் நெருக்கமான கடும்மோதலில் ஈடுபட்டனர் ஆளில்லா விமான ஆட்டிலறி தாக்குதல்களும் இடம்பெற்றன என உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சமி என்ற பகுதியை நோக்கி ரஸ்யாவின் முன்னேற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது என உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் இடம்பெற்ற திகதியை உக்ரைன் குறிப்பிடவில்லை எனினும் கடந்த சில வாரங்களாக உக்ரைனின் கடும் தாக்குதலால் ரஸ்யாவின் முன்னேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது என டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் படையினர் தாழப்பறக்கும் ஹெலிக்கொப்டரில் இலக்குகளை நோக்கி செல்வதையும்,காட்டுப்பகுதியில் மோதலில் ஈடுபடுவதையும் காண்பிக்கும் வீடியோவை உக்ரைன் வெளியிட்டுள்ளது.

ரஸ்ய படையினர் உக்ரைனின் நிலைகளை தாக்க மறுத்துள்ளமை அவர்கள் மத்தியிலான உரையாடல்களை இடைமறித்து கேட்டபோது தெரியவந்துள்ளதுஎன தெரிவித்துள்ள உக்ரைனின் இராணுவ புலனாய்வு பிரிவு 334 ரஸ்ய படையினர் கொல்லப்பட்டனர் 550க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் என தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply