ஆடைகளை மாற்றி கொண்டிருந்த போது, தாங்கள் தங்கியிருக்கும் அறைக்குள் குரங்கு ஒன்று நுழைந்ததை அவதானித்த பல்கலைக்கழக மாணவிகள் இருவர், அரைநிர்வாணமாக ஓடிய சம்பவமொன்று பதுளையில் அண்மையில் இடம்பெற்றுள்ளது..
இந்தப் பல்கலைக்கழக மாணவிகள் விடுமுறைக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு பதுளையில் உள்ள தங்கி இருக்கும் அறைக்கு திரும்பினர்.
அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து மதிய உணவையும் தயாரித்து கொண்டு வந்திருந்தனர். உணவு பொதிகளையும் துணிகளையும் தங்கும் அறையில் மேஜையில் வைத்துவிட்டு, பயணக் களைப்புடன், உடைகளை மாற்றத் தொடங்கினர். வெப்பம் காரணமாக தனது அறையில் ஒரு ஜன்னலை ஒரு மாணவி திறந்தாள்.
இதற்கிடையில், அருகே உள்ள ஒரு மரத்தில் இருந்த குரங்கு, உணவின் வாசனை உணர்ந்து, திடீரென ஜன்னல் வழியாக அறைக்குள் நுழைந்து, மேஜையில் ஏறி, சாமான்களை அவிழ்க்கத் தொடங்கியது.
அறைக்குள் குரங்கு புகுந்ததைக் கண்ட மாணவிகள், பயந்து போய், அரை நிர்வாணமாக அலறியடித்துக் கொண்டு அடித்தளத்திற்கு ஓடினர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர், அரை நிர்வாணமாக இருந்த மாணவிகளை அருகே உள்ள ஒரு அறையில் அடைத்தனர்.
அறையில் இருந்த குரங்கை விரட்டி அடித்த பிறகு, மற்றொரு பெண், அரை நிர்வாணமாக இருந்த மாணவிகள் இருவருக்கு தங்கள் ஆடைகளை வழங்கினார்,
அந்த மாணவிகள் இருவரும் அந்த ஆடைகளை அணிந்து கொண்டு, வெட்கத்தில் தங்களுடைய அறைக்கு திரும்பினர்.