நடிகை ஹன்சிகா மோத்வானி தனது கணவரை விவாகரத்து செய்ய உள்ளதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் பரவி வருகிறது.

இந்த நிலையில், இந்த வருடத்தில் தான் பல பாடங்கள் கற்றுக்கொண்டதாக நடிகை ஹன்சிகா மோத்வானி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

ஹன்சிகா மோத்வானி, தனது குழந்தை பருவத்தில் இருந்தே சினிமா மீது ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.

அவர் 2003ஆம் ஆண்டே குழந்தை நட்சத்திரத்தில் பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். பின்னர் தொடர்ந்து சினிமாவில் ஆர்வம் காட்டி வந்த அவர் வளர்ந்த பின்னரும் பல படங்களில் நடித்து வந்தார்.

பெரும்பாலும் ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர், 2010ஆம் ஆண்டில்தான் தமிழ் சினிமவில் எண்ட்ரி கொடுத்தார். அவர் தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதையடுத்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது. ரவி மோகனின் எங்கேயும் எப்போதும், விஜய்யின் வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை செய்யனும் குமாரு என தொடர்ந்து தமிழில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இந்த நிலையில், நடிகை ஹன்சிகா கடந்த 2022ஆம் ஆண்டு சோஹைல் கதுரியா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் அவர்களது திருமணம் வாழ்க்கை சரியாக போகாததுபோல் தெரிகிறது.

கடந்த சில நாட்களாகவே, நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது கணவரை பிரியவுள்ளதாகவும் விரைவில் விவாகரத்தை பெற்றுவிடுவார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

அதற்கேற்றதுபோல், ஹன்சிகாவும் தனது திருமணம் தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து delete செய்தார்.

இது மேலும், ஹன்சிகாவின் விவாகரத்து குறித்து பேச தூண்டியது. இந்த நிலையில், ஹன்சிகா மோத்வானி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

ஆக. 09ஆம் தேதி ஹன்சிகா தனது பிறந்தநாளை கொண்டாடிய அவர், இந்த ஆண்டு தனக்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்ததாக கூறி உள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், இந்த ஆண்டு பல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது.

எனக்குள் எனக்கே தெரியாத பலம் இருப்பதை உணர்த்தி உள்ளது. இந்த பிறந்தநாளில் உங்கள் அனைவரின் வாழ்த்துகளான் என் இதயம் நிரம்பி வழிகிறது.

சில நேரங்களில் சிறிய விஷயங்கள் கூட மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றன. அனைவருக்கும் நன்றி என தெரிவித்திருக்கிறார்.

நடிகை ஹன்சிகா மோத்வானியின் இந்த பதிவின் மூலம் அவரது விவாகரத்து விவகாரம் ரசிகர்களின் மத்தியில் மீண்டும் பேசும்பொருளாகி உள்ளது.

Share.
Leave A Reply