“கள்ளக்குறிச்சி,கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆனந்தன் (வயது 38). இவர் தனது வீட்டில் 20 ஆடுகளுக்கு மேல் வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் வளர்த்து வந்த ஆடுகளில் ஒன்று நேற்று 2 குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு குட்டி சாதாரண ஆட்டு குட்டியை போல் இருந்தது.
ஆனால் 2-வதாக ஈன்ற குட்டி மனித முக தோற்றத்துடன் வித்தியாசமான தோற்றத்தில் இறந்து பிறந்தது.
இதை அறிந்த கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இறந்து பிறந்த ஆட்டுக்குட்டியை வியப்புடனும், ஆச்சர்யத்துடனும் பார்த்து சென்றனர்.
மேலும் ஆடு இது போன்று வினோத உருவத்தில் குட்டியை ஈன்றதால் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் என பீதியை கிளப்பியதால் அந்த கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். “,