“கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தை கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் 23 வயது ஆசிரியர் பயிற்சி மாணவி சோனா எல்டோஸ்.
இவர், ரமீஸ் என்ற இஸ்லாமிய இளைஞரை காதலித்து வந்தார். இந்த நிலையில் ரமீஸ் மற்றும் அவரது உறவினர்கள் சோனாவை இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த சோனா கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.அவரது தற்கொலை குறிப்பில், தனது காதலன் ரமீஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் தன்னை மதம் மாற வற்புறுத்தியதாகவும், தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோனாவின் தாய் கூறுகையில், சோனா ரமீஸை மிகவும் நேசித்தால் மத மாற சம்மதிதாகவும், ஆனால் ரமீஸ்க்கு ஒரு கடத்தல் வழக்கில் தொடர்பு உள்ளது என தெரிந்ததும் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டதாகவும் கூறினர்.
ரமீஸ், சோனாவை அவரது வீட்டில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து, அடித்து துன்புறுத்தி மதம் மாற கட்டாயப்படுத்தினார் என்றும் சோனாவின் தாய் குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிந்த போலீசார் ரமீஸை கைது விசாரித்து வருகின்றனர். “,