தன் இணையுடன்  நியூட் செக்ஸ் (Nude Sex), அதாவது ஆடைகளின்றி செக்ஸ் கொள்வதைச் சில பெண்கள் விரும்பு வதில்லை.

மிகவும் தயங்குவார்கள். இதற்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல செக்ஸாலஜிஸ்ட் காமராஜிடம் கேட்டபோது, அவர் பகிர்ந்த முக்கியத் தகவல்கள் இங்கே…

உடல் பற்றிய தாழ்வுமனப்பான்மை!

சில பெண்கள் தங்கள் உடல் குறித்து, மார்பகங்கள் சிறியதாக உள்ளன, இடுப்புப் பெரிதாக உள்ளது உள்ளிட்டவற்றை தங்கள் குறையாக நினைப்பதுண்டு.

இந்தத் தாழ்வு மனப்பான்மையே, அவர்களைப் படுக்கை அறையில் ஆடைகளற்ற நியூட் செக்ஸுக்கு `நோ’ சொல்ல வைக்கிறது.

பொதுவாக, பெண்களுக்கு தங்களைப் பற்றிய சுய உணர்வு (கான்ஷியஸ்னெஸ்) அதிகம். சின்னச் சின்ன விஷயங்களைக்கூட அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்வார்கள்.

அதுவே உடல் என்று வரும்போது, `என் தோற்றம் வசீகரமாக இல்லை’, `மார்பகங்கள் எடுப்பாக இல்லை’ என்றெல்லாம் அவர்கள் தங்கள் உடலைப் பற்றி நினைக்க ஆரம்பிப் பார்கள்.

இதனால் அவர்கள் செக்ஸுக்குத் தங்களை போதாமையாக (inadequate) உணர்ந்தாலோ, அவர்களின் உடல் குறித்த தன்னம்பிக்கை அடிவாங்கினாலோ, படுக்கையறையில் தன் இணையிடம் உடலைக் காட்டுவதில் அவர்களுக்குச் சிக்கல் உண்டாகும்.

அதுமட்டுமல்லாமல், தன் உடல் குறித்த சிந்தனையுடனேயே இணையுடன் உறவில் ஈடுபடும்போது உச்சக்கட்டம் அடைய முடியாத நிலையை யும் அது உண்டாக்கிவிடும்.

ஆணுறுப்பு சிறிதாக இருக்கும் பிரச்னை

பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் தன் உடல் சார்ந்த நம்பிக்கையின்மை நிறையவே இருக்கும்.

எடுத்துக்காட்டாக, தன்னுடைய ஆணுறுப்பு மிகவும் சிறியதாக உள்ளதாக ஓர் ஆண் நினைக்க ஆரம்பித்தால், அவரால் தன் இணையுடன் செக்ஸில் சிறப்பாக ஈடுபட முடியாது.

மனைவியின் பக்கத்தில் செல்வதற்கே அவர் தயங்குவார், பதற்ற மடைவார். எனவே, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தன் உடலை தான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அது செக்ஸ் வாழ்க்கையைக் கடுமையாகப் பாதிக்கும்.

எனவே, முதலில் உங்கள் உடலை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள். அதேசமயம், உங்கள் உடலை ஆரோக்கியமாக, ஃபிட்டாக வைத்துக்கொள்ளவும் மறக்காதீர்கள்

உடற்பருமன்… என்ன தீர்வு?

இணையில் யாரேனும் ஒருவர் சற்று உடல் பருமனோடு இருந்தால், உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டுவரத் தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ளலாம்.

அதுதான் சரியான அணுகுமுறையும்கூட. அதற்காக, ‘இப்போது நாம் சரியான உடல் எடையுடன் இல்லை, அழகாக இல்லை. அதனால், எடையைக் குறைத்ததற்குப் பிறகுதான் செக்ஸ் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்’ என்று நினைக்காதீர்கள்.

ஒல்லியாக இருப்பது ஒருவகை அழகு என்றால், புஷ்டியாக இருப்பதும் ஒரு வகையான அழகுதான்.

எப்போதும்போல உங்கள் இணையுடன் மகிழ்ச்சியாகத் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடுங்கள். அதேசமயம், உயரத்துக்கு ஏற்ற எடை என்பது செக்ஸுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த ஆரோக்கியத்துக்கும் நல்லது என்பதால் அதை நோக்கி நகருங்கள்.

உச்சக்கட்டம் அப்போதுதான் கிடைக்கும்!

ஆணோ, பெண்ணோ… உங்கள் உடல் குறித்த தன்னம்பிக்கையை முதலில் வளர்த்துக்கொள்ளுங்கள்.

`நாம் நன்றாக இருக்கிறோம்’ என்ற நிறை உணர்வோடு ஆணும் பெண்ணும் செக்ஸில் ஈடுபடும்போது அங்கே மகிழ்ச்சி பெருகும். எதிர்பார்த்த உச்சக்கட்டமும் பரஸ்பரம் கிடைக்கும்.

ஜாலிக்காகக் கூட… கேலி செய்யாதீர்கள்!

இதில் மிக முக்கியமான விஷயம், ஆணோ, பெண்ணோ தன் இணையை அவர் உடல் குறித்து சீரியஸாகவோ, ஜாலியாகவோ கேலி செய்தால்… அவர் படுக்கையறையில் தன் இணையிடம் தன்னை முழுமையாக வெளிப் படுத்த முன்வரவே மாட்டார்.

எனவே, இதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்’’  அடிக்கோடிட்டுச் சொல்கிறார், மருத்துவர் காமராஜ்.

தாழ்வுமனப்பான்மை வேண்டாம்… தாழ்வாக உணரவைக்கும் கேலி வேண்டாம்!

 

Share.
Leave A Reply