சுவிஸ்  நாட்டில் St-Gall எனும் பகுதியில் இரு தமிழர்களிற்கிடையே நடந்த வன்முறை மோதலில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயமடைந்தார்

54 வயதான (மட்டக்களப்பை சேர்ந்த) இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார், 40 வயதான கொழும்பை சேர்ந்த தமிழர் படுகாயமடைந்தவர்  கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்..

சனிகிழமை அதிகாலை 1 மணியளவில் போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், லங்காஸ்ஸில் ( St-Gall -Langgasse)  என்னும் பகுதியில  இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

அவர்களில் 54 வயதான இலங்கையர் ஒருவர் சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

இரண்டாவது நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Share.
Leave A Reply