கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரை ஏக்கர் திட்டத்தில் தனிமையில் வசி த்த வயோதிப மாதுவின் கழுத்தறுத்து கொலைசெய்யப்பட்டு நகை கொள்ளையிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று பிற்பகல்வேளை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் விஜயரத்தினம் சரஸ்வதி (வயது – 78) என்ற வயோதிபப் பெண்ணே உயிரிழந்தவ ராவார்.
இச்சம்பவம் தொடபில்ப மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரை ஏக்கர் திட்டத்தில் வயோதிப மாது ஒருவர் தனி மையில் வசித்து வந்துள்ளார்.
நேற்றையதினம் குறித்த வயோதிபமாது கழுத்து, காது கள் அறுக்கப்பட்ட நிலை யில் இறந்திருந்ததை கண்ட அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு பொலி ஸார் சென்று பார்த்தபோது குறித்த வயோதிப மாதுவின் காதுகள் அறுக்கப்பட்டு தோடுகள் களவாடப்பட்டதோடு கழுத்துப்பகுதியிலும் வெட்டுக்காயம் காணப்பட்டுள்ளதுடன் வயோதிப மாது அணிந்திருந்த சங்கிலியும் களவாடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் அயலவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்ட போது வயோதிப மாதுவின் வீட்டின் அருகில் இளைஞர் கள் நின்றதாகவும் அவர்கள் போதைக்கு அடிமையானவர் கள் என்றும் சந்தேகம் தெரி வித்துள்ளனர்.
இவ் விடயம் குறித்து கிளிநொச்சிப் பொலி ஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.