புதுடெல்லி:மூத்த நடிகையும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான ஜெயா பச்சன் டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்புக்கு வந்தார்.

அப்போது அங்கிருந்த ஒருவர் ஜெயா பச்சனுடன் செல்ஃபி எடுக்க முயன்றார்.இதைக் கண்டதும் தனது நிதானத்தை இழந்த ஜெயா பச்சன் அவரை தள்ளிவிட்டுள்ளார்.

செல்ஃபி எடுப்பது தொடர்பாக சத்தம் போட்டுள்ளார்.ஜெயா பச்சன் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரை தள்ளிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இணையத்தில் இந்த வீடியோ வேகமாகப் பரவி வரும் நிலையில், அவரது செய்கையை பலரும் எதிர்த்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply