“கன்னியாகுமரியில் தன் உடன்பிறந்த சகோதரியை கர்ப்பமாக்கிய 16 வயது சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிக்கு 17 வயதில் ஒரு மகளும், 16 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இதில் அந்த சிறுவன் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்ட கணவரையும் பிள்ளைகளையும் வீட்டில் விட்டு விட்டு தாய் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.
சம்பவத்தன்று வீடு திரும்பிய தாயிடம் தனக்கு வயிற்று வலி அதிகமாக உள்ளதாக கூறி கதறி அழுதுள்ளார் மகள்.
உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்த போது சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
அப்போது போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் தான் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
ஊரடங்கால் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வரும் நிலையில் மகனுக்கு செல்போன் ஒன்றை தாய் வாங்கி கொடுத்துள்ளார்.
இணையத்தில் உலா வந்த சிறுவனுக்கு படிப்பை தாண்டி ஆபாச படங்களின் பக்கம் கவனம் திரும்பி உள்ளது.
எப்போதும் ஆபாச படங்களை பார்த்து வந்த சிறுவன், கடைசியில் தன் சகோதரியிடம் அத்துமீறியிருக்கிறார். இதில் சிறுமி கர்ப்பமடைந்தார்.
தினம் தினம் ஏராளமான வீடியோக்களை பார்க்கும் தன் தம்பி தொடர்ந்து தன்னிடம் அத்துமீறியதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் அவர்…
இதையடுத்து சிறுவனின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதில் ஏராளமான ஆபாச படங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
8 மாத கர்ப்பிணியான சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிள்ளைகளின் கையில் இருக்கும் இந்த செல்போன் என்னென்ன கொடூரங்களை எல்லாம் பார்க்க வைக்கப் போகிறதோ? என்ற அச்சம் தான் இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது… “,