சென்னை: இளையராஜாவும் வைரமுத்துவும் பிரிய காரணம் என்ன என்பது குறித்து கங்கை அமரன் ஒரு விழாவில் தெரிவித்துள்ளார்.

“ஊமை விழிகள்” படத்தின் பின்னணி இசை பார்த்த பிறகுதான் இளையராஜா தனது பின்னணி இசையில் புதிய ஸ்டைலை உருவாக்கினார் என்றும் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில் அனுராதா அன்பரசு தயாரிப்பில், “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”. இந்த படத்தில் பப்லு, புதுப்பட்டு சக்திவேல், வாழை ஜானகி, கதாநாயகியாக ஏஞ்சல், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நடந்தது. இதில் இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான கங்கை அமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவர் இந்த விழாவில் இளையராஜா, வைரமுத்து பிரிவு குறித்தும் பேசியிருக்கிறார். கங்கை அமரன் கங்கை அமரன் கூறுகையில், “பொதுவாக கமல் இயல்பாக இருக்க மாட்டார். ரஜினிகாந்த் மிகவும் இயல்பானவர்.

அனைவரும் இயல்பாகதான் இருக்க வேண்டும். அதுதான் நல்லது. கமலைப் பற்றி இன்னும் சொல்லலாம். ஆனால் அவர் தற்போது எம்பியாகிவிட்டதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

ஊமை விழிகள்

ஊமை விழிகள் படத்தின் பின்னணி இசை பார்த்த பிறகுதான் இளையராஜா தனது பின்னணி இசையில் புது ஸ்டைலை உருவாக்கினார்.

ஹேராம் படத்தில் புதுவிதமான பாட்டு உருவாக நான்தான் காரணம். ஆனால் இதை இளையராஜாவோ கமல்ஹாசனோ எந்த மேடையிலும் சொல்லவில்லை, எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.

” ரஜினி நடிக்கும் போது

இந்த வயதிலும் ரஜினிகாந்த் நடிக்கும் போது அவர் வயதை ஒட்டிய நானும் ஏன் இசையமைக்கக் கூடாது. நான் இசையமைக்க தயாராக இருக்கிறேன்.

10 ஆண்டுகள் என்னை இளையராஜா ஒதுக்கி வைத்திருந்தார். அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு வைரமுத்து அவரிடம் பாட்டு எழுதி வளர்ந்தார்.

வைரமுத்து இளையராஜா

அந்த கால கட்டத்தில் கல்லூரி விழாக்களில் வைரமுத்து கலந்து கொண்டு பேசும் போதெல்லாம், இளையராஜா வளர்ந்து வருவதற்கு காரணம் நானே,

என் பாடலே என வைரமுத்து கூறியிருந்தார். இதை கேள்விப்பட்டு நான் அண்ணனிடம் போய் சொன்ன போதும் அவர் நம்பவில்லை.

ஆதாரப்பூர்வமாக அதை அறிந்து கொண்ட பிறகு இளையராஜாவுக்கும் வைரமுத்துக்கும் விரிசல் ஏற்பட்டது. விரிசலுக்கு முக்கிய காரணமே வைரமுத்து அவ்வாறு பேசியதுதான். இதை அண்ணன் எங்குமே சொன்னதில்லை. ஆனால் நான் ஒரு ஓட்டை வாய் சொல்லிவிட்டேன். இவ்வாறு கங்கை அமரன் பேசியிருந்தார்.

விரிசல் ஏன்

பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணி 1970, 80களில் வெற்றிக் கூட்டணியாக வலம் வந்தது. வைரமுத்துவும் இளையராஜாவும் ஏராளமான பாடல்களை உருவாக்கியுள்ளனர்.

வைரமுத்து எழுதிய “திருத்தி எழுதிய தீர்ப்புகள்” என்ற கவிதை புத்தகத்தை பாரதிராஜாவிடம் கொடுத்து முடிந்தால் பயன்படுத்துங்கள் என கூறினாராம்.

” வைரமுத்து கவிதை

இதை படித்த பாரதிராஜாவுக்கு அந்த கவிதைகள் பிடித்து போனதால், மெட்டுக்கு வரிகள் எழுத முடியுமா என கேட்டாராம்.

 

அதற்கு வைரமுத்து, மெட்டை போடுங்கள் எழுதி பார்க்கிறேன் என்றாராம். அப்போது உருவானதுதான் “இது ஒரு பொன்மாலை பொழுது” என்ற பாடல் வந்தது.

கடைசியாக இணைந்து பணியாற்றிய படம்

1980 களில் தொடங்கி 7 ஆண்டுகள் வரை இளையராஜாவும் வைரமுத்துவும் ஒன்றாகவே பயணித்தார்கள்.

பிறகு சில பாடல்களில் இளையராஜா தலையிட்டு திருத்தம் சொன்னது வைரமுத்துவுக்கு பிடிக்கவில்லை என சொல்கிறார்கள்.

அது போல் “தாய்க்கொரு தாலாட்டு” எனும் படத்தில் எல்லா பாடல்களை வைரமுத்து எழுதினாராம்.

ஆனால் இசை கோர்ப்பின் போது ஒரு பாடலை வாலியிடம் எழுதி இளையராஜா வாங்கியதாலும் மனக்கசப்பு எழுந்ததாக சொல்லப்படுகிறது.

கடைசியாக பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்திற்கு வைரமுத்துவும் இளையராஜாவும் பணியாற்றிய நிலையில் அதன் பிறகு ஒன்று சேரவில்லை என சொல்லப்படுகிறது.

இவை எல்லாம் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியது மட்டுமே ஒழிய, எந்த இடத்திலும் வைரமுத்துவோ, இளையராஜாவோ எதற்காக பிரிந்தார்கள் என சொன்னதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Share.
Leave A Reply