மொபைல் உற்பத்தியில் மிகப்பெரிய நிறுவனமாக திகழ்ந்து வருவது ஆப்பிள். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் மொபைல் போன்களை உற்பத்தி செய்து அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகிறது.
ஆப்பிள் நிறுவனம் பெங்களூருவில் Embassy Zenith கட்டிடத்தில் 5 ஆவது மாடியில் இருந்து 13ஆவது மாடி வரை 9 மாடிகளை 10 வருடத்திற்கு குத்தகைக்கு எடுத்துள்ளது.
அந்த கட்டடிடத்தில் பார்க்கிங் இடம் உள்பட மொத்தமாக 2.7 லட்சம் சதுர அடி இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது.
மாதத்திற்கு சுமார் 6.3 கோடி ரூபாய் வாடகையாக செலுத்துகிறது. 10 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதியில் இருந்து வாடகை செலுத்தி வருகிறது
.மாத வாடகையாக 6.3 கோடி ரூபாய் செலுத்தும் நிலையில், பாதுகாப்பு டெபாசிட்டாக 31.57 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது.
ஒரு சதுர அடிக்கு 235 ரூபாய் என்ற அடிப்படையில் மாத வாடகை செலுத்துகிறது. இது வருடத்திற்கு வரடம் 4.5 சதவீதம் அதிகரிக்கும். அதன்படி 10 வருடத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வாடகை செலுத்தியிருக்கும்.”,