2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1,500,656 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வாண்டில் அதிகளவான சுற்றலுாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

அத்துடன், ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, ஜெர்மனி, சீனா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றலுாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், ஜனவரி மாதத்தில் 252,761 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரி மாதத்தில் 240,217 சுற்றுலாப் பயணிகளும், மார்ச் மாதத்தில் 229,298 சுற்றுலாப் பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 174,608 சுற்றுலாப் பயணிகளும், மே மாதத்தில் 132,919 சுற்றுலாப் பயணிகளும், ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகளும், ஜூலை மாதத்தில் 200,244 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

Share.
Leave A Reply