கேரள ராப் பாடகர் வேடனை பாலியல் புகாரில் கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிபதி விசாரணையில், விருப்பத்துடன் உடலுறவு பாலியல் வன்கொடுமையாகாது எனக் கூறினார்.

பாலியல் புகாரில் கேரளாவை சேர்ந்த ராப் பாடகர் வேடனை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

வேற்றுமை, அடக்குமுறைகளுக்கு எதிராக தனது ராப் இசை பாடல்கள் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் கேரளாவைச் சேர்ந்தபாடகர் வேடன். இந்நிலையில் பாடகர் வேடன்மீது இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தனர்.

இதையடுத்து கேரள உயர்நீதிமன்றத்தில் முன்பிணை கோரி பாடகர் வேடன் சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தன்னையும் சேர்க்கக்கோரி பாத்கிக்கப்பட்ட பெண் ஒருவர் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், விருப்பத்துடன் உடலுறுவு வைத்துக்கொள்வது எப்படி பாலியல் வன்கொடுமையாகும் என கேள்வி எழுப்பினார்..

இருவருக்கும் இடையே உறவு முறிந்தால் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட உடல் ரீதியான உறவை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என்றும் நீதிபதி கூறினார்.

Share.
Leave A Reply