“இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், ராஜஸ்தானைச் சேர்ந்த மாணிகா விஸ்வகர்மா மிஸ் யூனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்றுள்ளார்.
வரும் நவம்பரில் தாய்லாந்தில் நடைபெறும் 74வது மிஸ் யூனிவர்ஸ் உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பாக இவர் முன்நிறுத்தப்படுவார்.
ஆகஸ்ட் 18, திங்கட்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் மாணிகா வெற்றி பெற்று கீரிடம் சூட்டிக் கொண்டார்.
போட்டியில் முதல் ரன்னர் அப் – உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தான்யா சர்மாஇரண்டாவது ரன்னர் அப் – ஹரியானாவின் மேஹக் திங்க்ராமூன்றாவது ரன்னர் அப் – அமிஷி கௌஷிக்யார் இந்த மாணிகா விஷ்வகர்மா?
ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணிகா தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் ராஜஸ்தான் 2024 பட்டத்தை வென்றிருந்தார்.
தற்போது பொலிடிக்கல் சைன்ஸ் மற்றும் எகானாமிக்ஸ் துறையில் தனது பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் பயின்று வருகிறார்.
பல்திறமைகளை கொண்டவர் மாணிகா, நடனம், ஓவியம் , இந்தியாவின் பிரதிநிதியாக BIMSTEC Sewocon (வெளிவிவகார அமைச்சகத்தின் முன்முயற்சி) நிகழ்வில் பங்கேற்றவர்லலித் கலா அகாடமி மற்றும் ஜே.ஜே. ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் சார்பில் பாராட்டுப் பெற்றவர்மாணிகாவின் சாதனைகள், அவர் பட்டம் வென்றுள்ள இந்த வெற்றியுடன் சேர்ந்து,
இந்தியாவை உலக அரங்கில் மேலும் பிரகாசிக்கச் செய்யும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.மேலும் போட்டியின் இறுதியில் கேட்கப்பட்ட அறிவு சார்ந்த கேள்விக்கு மாணிகா அளித்த பதி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெண்களுக்கு படிப்பா? அல்லது பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களுக்கு பண உதவி வாங்குவிர்களா? என கேட்டபோது . அவர் இது இரண்டுமே நாணயத்தின் இருப்பக்கம் போல் இரண்டுமே முக்கியம் தான்
ஆனால் நான் பெண் படிப்புக்கு முக்கியத்வடுவம் கொடுப்பேன் ஏன்னெனில் அது தனிமனித வளர்ச்சி அல்ல ஒட்டு மொத்த உலகத்தில் வளர்ச்சியை அது குறிக்கும் என கூறினார்.”,