“பிரிட்டனில் இந்தியாவை சேர்ந்த 2 முதிய சீக்கியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.ஆகஸ்ட் 15 ஆம் தேதி, வால்வர்ஹாம்டன் ரெயில் நிலையத்திற்கு வெளியே மூன்று இளைஞர்கள் இரண்டு சீக்கியர்களைத் தாக்கினர்.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் பாதிக்கப்பட்டவர்கள் தரையில் கிடப்பதையும், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் அவர்களை உதைப்பதையும், இரு சீக்கியர்களின் அகற்றப்பட்ட தலைப்பாகைகள் தரையில் கிடப்பதையும் காண முடிகிறது.

சம்பவ இடத்திலிருந்து மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ஆனால் பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

பஞ்சாபின் சிரோமணி அகாலிதளத் தலைவர் சுக்பீர் சிங் பாதல் இந்த சம்பவத்தை கடுமையாகக் கண்டித்து, இது ஒரு கொடூரமான இனவெறி குற்றம் என்று தெரிவித்துள்ளார்.

சீக்கிய சமூகம் எப்போதும் மற்றவர்களின் நலனுக்காக பாடுபடுவதாகவும், உலகம் முழுவதும் பாதுகாப்பையும் மரியாதையையும் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்தப் பிரச்சினையை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் வலுவாக கண்டணத்தை எழுப்புமாறு பாதல் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.”,

Share.
Leave A Reply