இச் துயரசம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை சுவிஸ் நாட்டில் நியுசாட்டெல் கான்டனின் (canton de Neuchâtel,) நகராட்சியில் நடந்துள்ளது.

ஒரு தந்தை தனது முன்னாள் மனைவியையும், அவர்களது இரண்டு குழந்தைகளையும் சமையலறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இது முற்றிலும் கோழைத்தனமான ஒரு துயர சம்பவம் என்று வழக்கறிஞர் Jean-Paul Ros கூறினார். செவ்வாயன்று நெüசாட்டல் மாகாணத்தில் உள்ள கோர்செல்ஸில் (Corcelles)  என்ற இடத்தில் இரத்த ஆறு ஓடியுள்ளது.

47 வயதுடைய ஒரு பெண்ணும், 10 மற்றும் 3.5 வயதுடைய அவரது இரண்டு மகள்களும், அவர்களது முன்னாள் கணவரால் கொல்லப்பட்டனர்,

அவர்கள் சமீபத்தில்தான் அவரைப் பிரிந்து வாழ்ந்தனர். என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் ஒரு திகைப்பூட்டும் தகவலை வழங்கினர்.

அன்று மாலை வெளிநாட்டிலிருந்து அவரது உறவினர்  ஒருவர் பிள்ளைகளின் தாயைப் தொடர்பு கொண்டபோது, அவரை பற்றிய தகவல எதுவும் கிடைக்காததால், இது சம்பந்தமாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ந்த சந்தேகத்தையும் நீக்க, இரவு 10:30 மணிக்கு ஒரு பூட்டு தொழிலாளி மூலம் அடுக்குமாடி குடியிருப்பின் கதவைத் திறக்க முடிவு செய்யப்பட்டது என்று நீதித்துறை காவல்துறைத் தலைவர் சைமன் பேச்லர் தெரிவித்தார்.

குற்றவாளி காவலர்களையும் தாக்க முற்பட்டுள்ளார்.

ஒரு மணி நேரம் கழித்து கதவு திறக்கப்பட்டதும், அது ஒரு பயங்கரமான காட்சியாக இருந்தது.

இரண்டு அதிகாரிகளும் இரத்தம் தோய்ந்த இரண்டு குழந்தைகளின் உடல்களை பார்த்தனர்.

அவர்களுக்கு முன்னால் 52 வயதுடைய ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார், அவர் காயமடைந்திருந்தார், அவர் “ஆறு அங்குல சமையலறை கத்தியை” வைத்திருந்தார்.

அந்த நபர் அதிகாரிகளின் கட்டளைகளைப் புறக்கணித்து அவர்களைத் தாக்கினார். அதிகாரிகளில் ஒருவர் தனது துப்பாக்கியால் அந்த நபரின் கீழ் உடலில் மூன்று முறை சுட்டார்.

பொலிசார் உடனடியாக அவருக்கும், இரண்டு குழந்தைகளுக்கும் முதலுதவி அளித்தனர், “ஆனால் குழந்தைகள் ஏற்கனவே  இறந்து சிறிது நேரம் ஆகியிருந்தது தெளிவாகத் தெரிந்தது,” என்று சைமன் பேச்லர் மேலும் கூறினார்.

பின்னர், மற்றொரு அறையில், “இரத்த வெள்ளத்தில் மற்றொரு உடல்” இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர், அது தாயின் உடல்.  பூனை ஒன்றும் கொல்லப்பட்டுகிடந்தது

முரண்பட்ட பின்னணிகள்

இந்தக் குடும்பம் அல்ஜீரிய வம்சாவளியைச் சேர்ந்தது மற்றும் பல ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வசித்து வந்தது.

தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், சுயநினைவுடன் இருந்தார், மேலும் இந்த நேரத்தில் “அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை”. சந்தேக நபர் மீது கொலை மற்றும் காவல்துறை அதிகாரிகளில் ஒருவரை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சொத்தை ஒன்றை சேதப்படுத்தியதற்காக அந்த நபர் 2022 இல் தண்டிக்கப்பட்டார். “இருப்பினும், அதன் பின்னர்  அவரின் நிலைப்பாட்டில்  கவலைக்கிடமாக  எதுவும் நடக்கவில்லை,” என்று வழக்கறிஞர் முடித்தார். அவர் “வன்முறையில் ஈடுபட்டதற்கான  எந்த ஆதாரமும் எங்களிடம் இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்

 

 

 

Share.
Leave A Reply