சென்னை: 2026 தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகி வரும் நிலையில் தங்கள் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு என்ன என்பது குறித்து ரகசியத்துடன் சஞ்சரியுங்கள் என விஜய் பேசி இருந்தார்.

இந்த நிலையில் தேசிய கட்சியான காங்கிரசுடன் விஜய் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், 70 சீட்டுகள் மற்றும் துணை முதல்வர் பதவி தர தயாராக இருப்பதாக விஜய் பேசி இருக்கிறார்.

திமுக, காங்கிரஸ் கேட்கும் சீட்டுகளை தரவில்லை என்றால், இறுதி நேரத்தில் விஜயுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கலாம் என கூறப்படுகிறது.

நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். நேற்று முன்தினம் மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்ததே அதற்கு காரணம்.

மாநாட்டில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட நிலையில், மாநாட்டில் விஜய் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மீண்டும் முதல்வர் ஸ்டாலின், குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் நேரடியாக விமர்சனம் செய்திருக்கிறார்.

விஜய் அரசியல்

பாஜக, திமுக தவிர்த்து முதன்முறையாக கட்சியின் மாநாட்டில் அதிமுகவை விஜய் விமர்சித்து பேசி இருப்பதையும் கவனிக்க வேண்டும்.

எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி தற்போது யார் கையில் இருக்கிறது என கேள்வி எழுப்பியிருந்தார். விஜயின் பேச்சு அரசியலில் பரபரப்பை கிளப்பியிருக்கும் நிலையில், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே விஜயை விமர்சித்து வருகிறது.

 2026 கூட்டணி

தமிழகத்தின் பிரதான கட்சிகளில் விஜய் நேற்று காங்கிரஸ் கட்சியை மட்டும் விமர்சித்து பேசவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

இந்த நிலையில் கூட்டணி நிலைப்பாடு குறித்து பேசிய விஜய் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை மீண்டும் உறுதி செய்தார்.

அதுமட்டுமல்லாமல் தாங்கள் யாருடன் கூட்டணி அமைக்க போகிறோம் என்பது ரகசியம். அந்த ரகசியத்துடனே சஞ்சாரம் செய்யுங்கள் என விஜய் பேசி இருந்தார்.

தமிழக தேர்தல்

இதன் மூலம் ஏதோ ஒரு கட்சியுடன் விஜய் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி இருப்பது தெரிய வந்திருக்கிறது.

இதற்கு இடையே விஜய் தரப்பில் பேசியபோது அந்த கட்சி காங்கிரஸ் தான் என்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழக நிர்வாகிகளிடம் கிரிஸ் சோடங்கர் ஆலோசனை நடத்தினர்.

அப்போது தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என ஏராளமான நிர்வாகிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

திமுக மோதல்

திமுகவுடன் பல ஆண்டுகளாக தமிழகத்தில் கூட்டணியில் இருக்கும் நிலையில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் மிக குறைந்த அளவு தொகுதிகளையே ஒதுக்கி வருகிறது.

கடந்த தேர்தலில் 25 சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில் 10 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். அதே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட சீட்டுகளை ஒதுக்கி இருந்தால் குறைந்தது 25 எம்எல்ஏக்களாவது கிடைத்திருப்பார்கள்.

எனவே வரும் தேர்தலில் 50க்கும் மேற்பட்ட சீட்டுகளை திமுகவிடம் கேட்டு பெற வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர்.

காங்கிரஸ்

அதற்கு திமுக நிச்சயம் உடன்படாது என்பது காங்கிரஸ் தலைமைக்கும் தெரியும். இந்த நிலையில் தமிழக அரசியலில் புதிய வரவான விஜய்யுடன் காங்கிரஸ் தலைமை பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது.

கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் புதுச்சேரியை சேர்ந்தவர். அவர் மூலம் அங்கிருக்கும் முக்கிய காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் மூலம் விஜய் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது.

70 சட்டமன்ற தொகுதிகள் துணை முதலமைச்சர் பதவி என்ற உடன்படிக்கையின் மூலம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.

சீட் பேச்சுவார்த்தை

தற்போது கூட்டணி குறித்து வெளிப்படையாக பேச வேண்டாம். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக விடும் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

உரிய முறையில் சீட்டுகளை தர திமுக தலைமை மறுத்தால் விஜயுடன் ஆலோசனை நடத்தலாம் என கிரிஷ் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் பாமக உடனும் விஜய் கூட்டணி அமைக்கலாம் என சொல்லப்படுகிறது.

இப்படியாக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இறுதிக்கட்டத்தில் கூட்டணி மாறுதல்கள் தமிழக அரசியலில் நிகழலாம் என்றனர். Published On August 23, 2025

 

Share.
Leave A Reply