கொலண்டிலிருந்து யாழ்ப் பாணம் வந்திருந்த நிலையில் வாந்தி எடுத்த குடும்பப் பெண்
ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கந் தர் மடம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவலிங்கம் ஜெயலட் சுமி (வயது-61) என்ற மூன்று பிள்ளைகளின் தாயாராவார்.

மேற்படி குடும்பப் பெண் கந்தர் மடத்தில் தங்கி இருந்த நிலை யில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை வாந்தி எடுத்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனும தித்த போதும் சில மணித்தி யாலங்களில் அவர் உயிரிழந் துள்ளார்.

இம் மரணம் தொடர் பில் யாழ். போதனா வைத்திய சாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்கு மார் விசாரணை மேற்கொண் டார். சாட்சிகளை யாழ்ப்பாண பொலிஸார் நெறிப்படுத்தினர்.

Share.
Leave A Reply