ரெயிலில் பெண் பயணி ஒருவரிடம் ரெயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி டெல்லி-பிரயாக்ராஜ் ரெயிலில் நடந்தது.

முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த பெண் பயணியிடம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் ஆஷிஷ் குப்தா தவறாக நடந்து கொண்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் பயணி கூச்சலிட்டுள்ளார். மேலும், கான்ஸ்டபிளை கண்டித்து அவரை வீடியோ எடுத்துள்ளார்.

இதையடுத்து, கான்ஸ்டபிள் ஆஷிஷ் குப்தா அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.இந்த வீடியோ வைரலான நிலையில் கான்ஸ்டபிள் ஆஷிஷ் குப்தாவை ரயில்வே காவல்துறை இடைநீக்கம் செய்துள்ளது.

Share.
Leave A Reply