• கோட்டை நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்

• போத்தல் வீச்சில் பொலிஸ்காரர் காயம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான நீதிமன்ற விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் சற்று முன்னர் தொடங்கியது. ரணில் விக்கிரமசிங்க இன்றியே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகளான திலக் மாரப்பன, அனுஜா பிரேமரத்ன, உப்புல் ஜெயசூரியா, அலி சப்ரி மற்றும் வழக்கறிஞர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்காக ஆஜராகின்றனர்.

மேற்படி சட்டத்தரணிகளுடன், சுமார் 300க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளும் நீதிமன்றத்தில் பிரசன்னமாய் உள்ளனர்.

 

கோட்டை நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்

கோட்டை, நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வழக்கு, இன்னும் சொற்பநேரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நீதிமன்ற வளாகத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

போத்தல் வீச்சில் பொலிஸ்காரர் காயம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், ரணிலின்றி ஸூம் தொழிற்நுட்பம் ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

இதேவேளையில் கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு வெளியே, எதிர்க்கட்சியினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பணியில் இருந்த ஒரு பொலிஸ்காரர், ஒரு போராட்டக்காரர் வீசிய போத்தல் தாக்கியதில் காயமடைந்தார்.

நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, போத்தல், ஒரு யூடியூபரை குறிவைத்து வீசப்பட்டது, ஆனால் பொலிஸ்காரர் பின்னால் மறைந்திருந்தபோது அவர் மீது பட்டுள்ளது.

 

Share.
Leave A Reply