லக்னோ: தாலி கட்டிய கணவரை விட்டுவிட்டு கள்ளக்காதலனோடு தான் வாழ்வேன் என்று இளம்பெண் ஒருவர் பஞ்சாயத்தில் கூறிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மாதத்தில் 15 நாட்கள் கள்ளக்காதலனோடு இருக்க அனுமதித்தால் தான் கணவருடன் வாழ்வேன் என்று அந்த இளம்பெண் பஞ்சாயத்தில் கூறியிருக்கிறார்.

கணவர் கதறி அழுது கெஞ்சியும் மனைவி கேட்கவில்லை. இதனால் இறுதியில் கள்ளக்காதலனுக்கே மனைவியை தாரை வார்த்து விட்டு சோகத்துடன் அந்த வாலிபர் திரும்பி சென்றுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்தார். இருவரும் ஒன்றாக மகிழ்ச்சியுடன் தான் வாழ்ந்து வந்தனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் ஆகியிருந்தது.

கள்ளக்காதலனோடு உல்லாசம்

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இளம்பெண்ணுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. அதே மாவட்டத்தை சேர்ந்தவருடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதனால் கணவர் இல்லாத நேரத்தில் அவருடன் செல்போனில் பேசி வந்தார். கணவர் வந்த பிறகு ஏதும் தெரியாதது போல் இருந்து விடுவார்.

இப்படியாக சில நாட்கள் சென்றது. இதன்பிறகு கணவர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கள்ளக்காதலனை நைசாக வீட்டுக்கு அழைத்து இருக்கிறார்.

அப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதன் பிறகு கணவர் வருவதற்குள் இளம்பெண் கள்ளக்காதலனை வீட்டை விட்டு அனுப்பிவிடுவார்.

இப்படியாக சில நாட்கள் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்தனர். பின்னர் இந்த விஷயம் மெல்ல மெல்ல கணவருக்கு தெரியவந்தது.

 

 10 முறை வீட்டை விட்டு ஓடியுள்ளார்

இதனால் சந்தேகமடைந்து மனைவியிடம் கேட்டிருக்கிறார். ஆனால் அவர் எதோ சொல்லி சமாளித்துவிட்டாராம். மனைவி சொல்வதை அப்படியே இவர் நம்பியிருக்கிறார். இந்த நிலையில் இவர்களது கள்ளக்காதல் வீட்டை விட்டு வெளியிலும் சென்றதது.

அதாவது கள்ளக்காதலனோடு இளம்பெண் வெளியிலும் சுற்ற ஆரம்பித்துள்ளார். இதனால் இவர்கள் விவகாரம் கணவருக்கு தெரியவந்தது.

இது தொடர்பாக கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

எனினும் இளம்பெண் சண்டை போடுவது போல் போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விடுவாராம்.

கோபத்தில் தான் வீட்டைவிட்டு சென்றுவிட்டாள் என நினைத்து மனைவியை கணவர் தேடிய நிலையில், இளம்பெண்ணோ கள்ளக்காதலனோடு ஊர் சுற்றி வருவாராம்.

இப்படியாக 10 முறை வீட்டை விட்டு கள்ளக்காதலனோடு சென்றுள்ளார். மனைவி மீது அதீத பாசம் கொண்ட கணவர் மனைவியை திட்டாமல் வீட்டுக்கு அழைத்து வருவார்.

 மாதம் 15 நாட்கள் கள்ளக்காதலனோடு இருப்பேன்

பின்னர் எதேதோ காரணம் சொல்லியும், சொல்லாமலேயும் வீட்டை விட்டு ஓடி கள்ளக்காதலனோடு சென்றுள்ளாராம்.

இதனால் ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், இது பற்றி பெண்ணின் உறவினர்கள், பெற்றோர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.

இதையடுத்து எல்லாரும் கூடி பேசி பஞ்சாயத்து செய்தால் தான் சரி வரும் என முடிவு எடுத்துள்ளனர்.

இதன்படி பஞ்சாயத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது கிராமப் பெரியவர்கள் பலரும் இளம்பெண்ணை கள்ளக்காதலை கைவிட்டுவிட்டு கணவருடன் வாழ அறிவுரை வழங்கினர்.

ஆனால் இளம்பெண்ணோ, அதெல்லாம் முடியாது.. மாதத்தில் 15 நாட்கள் கள்ளக்காதலனுடன் இருக்க அனுமதித்தால் மட்டுமே கணவருடன் வாழ்க்கை நடத்துவேன் என அடம்பித்துள்ளார்.

பெண்ணின் குடும்பத்தினர் உறவினர்கள், ஊர் பெரியவர்கள் மணி கணக்காக பொறுமையாக அறிவுரை கூறியும் இளம்பெண் விடாப்பிடியாக அதே பதிலை தான் சொன்னார்.

.கணவர் கெஞ்சியும் கேட்கவில்லை

அவரது கணவர் கதறி அழுதும் இளம்பெண் தான் எடுத்த முடிவு தான் இறுதியானது. இஷ்டம் இருந்தால் இருக்கிறேன். இல்லை என்றால் கள்ளக்காதலுடன் செல்கிறேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதனால் கள்ளக்காதலனுக்கு மனைவியை தாரை வார்த்து விட்டு சோகத்துடன் அந்த வாலிபர் திரும்பி சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

Share.
Leave A Reply