இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஆடி 29ம் திகதியுடன் 38 வருடங்களாகின்றன. இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கும் தோல்வியைத் தந்தது.

தமிழ் மக்களுக்கும் தோல்வியைத் தந்தது. இந்தியப் படைகள் தமிழ் மக்களினதும், சிங்கள மக்களினதும் கடுமையான எதிர்ப்பைப் பெற்று அவமானகரமாக வெளியேறியதுடன் ஒரு வகையில் ராஜீவ் காந்தியின் மரணத்திற்கும் காரணமாகியது.

ஏட் டிக்கு போட்டியாக புலிகளை அழிக்க வேண்டும் என்ற வெறியில் இந்தியா யுத்தத்திற்கு பக்க பலமாக நின்று தனக்கு சார்பான வலுச் சமநிலையை யும் சீனாவிற்கு சார்பாக திருப்பிவிட்டிருக்கிறது.

இன்று சீனாவின் செல்வாக்கினை எவ்வாறு முறியடிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றது.

சீனாவினை அகற்றுதல் என்ற ஒற்றை இலக்கிற்காக அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்ததும் கூட தனது இலக்கில் ஒரு அங்குலம் கூட அதனால் முன்னேற முடியவில்லை.

இந்தியாவின் அணுகு முறையை நடைமுறைப்படுத்திய சிவச ங்கர் மேனன், நாராயணன் போன்ற அதி காரிகள் கூட தற்போதைய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை விமர்சிக்கின்றனர்.

மறுபக்கத்தில் தமிழ் மக்களை இந்தியாவின் அணுகுமுறை பெருந்தேசிய வாதத்தின் வாயில் கொண்டு போய்விட் டிருக்கின்றது.

ஒப்பந்தத்தில் குறிப் பிட்ட வட – கிழக்கு இணைப்பையோ, அதிகாரங்களையோ தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க இந்தியாவால் முடியவில்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூட இந்தியாவிற்கு கைகொ டுக்கவில்லை.

1977 ஆம் ஆண்டு 5/6 பெரும் பான்மையுடன் பதவிக்கு வந்த ஜே.ஆர் அரசாங்கம் அமெரிக்காவிற்கு இலங்கையின் கதவுகளை வரையறையின்றி திறந் துவிட்டது.

அமெரிக்கா தலைமையி லான அணிக்கும், சோவியத் யூனியன் தலைமையிலான அணிக்கும் இடையே உச்சகட்ட பனிப்போர் நிலவிய காலகட் டம் அது.

சோவியத் யூனியனின் ஆப் கானிஸ்தான் மீதான படையெடுப்பை கண்டு அஞ்சிய அமெரிக்கா அவசரம் அவசரமாக பாகிஸ்தானுடன் இராணு வக்கூட்டு ஒப்பந்தத்தைச் செய்தது.

சீனாவும் பாகிஸ்தானுக்கு இராணுவ உதவிகளை வழங்கியது. ஏற்கெனவே சீனப் படையெடுப்பால் பலத்த அடி வாங்கிய இந்தியா தனது புகழ் பெற்ற அணிசேராக் கொள்கையைக் கைவிட்டு சோவியத் யூனியனுடன் பாதுகாப்பு ஒப் பந்தத்தை செய்திருந்தது.

அமெரிக்கா – பாகிஸ்தான் கூட்டு இந்தியாவிற்கு அச்சத்தை கொடுத்த நிலையில் தனது வாசற்படியான இலங்கையும்அமெரிக்காவிற்கு கதவுகளை திறந்து விட்டமை இந்தியாவிற்கு பலத்த அச்சத்தை உருவாக்கியது.

ஜே.ஆர். ஜெயவர்த்தனா

அமெரிக்காவின் செல்லப் பிள்ளை யான ஜே.ஆர். ஜெயவர்த்தனா
தமிழ் மக்களின் போராட்டத்தை நசுக்குவதற்கு இந்தியாவிற்கு எதிரான சக்திகளான அமெரிக்கா, பாகிஸ்தான், இஸ்ரேல், தென்னாபிரிக்கா, சீனா போன்றவற்றிடமிருந்து ஆயுத உதவி களையும் இராணுவ பயிற்சிகளையும் பெற்றார்.

அமெரிக்கா இலங்கைக்கான தனது உதவிகளை இராணுவ, தொழில் நுட்பங்களை இஸ்ரேலுக்கூடாகவே வழங்கியது.

கொழும்பில் இருந்த அமெரிக்க தூதரகத்தில் இதற்காக இஸ்ரேல் நலன்புரிப் பிரிவு திறக்கப்பட்டது. இஸ்ரேலின் உதவியு டன் இலங்கையின் கடற்படை நவீனமயமாக்கப்பட்டு கட்டியெ ழுப்பப்பட்டது.

இஸ்ரேலின் உளவுப்பிரிவான சின்பெற் தமிழர்களின் ஆயுதப்போராட் டத்தை நசுக்குவ தற்கான போரியல் நுட்பங்களை விசேட அதிரடிப் படைக்கு வழங்கியது.

அமெரிக்கா சிலாபத்தில் அமெரிக்காவின் குரல் வானொலிச் சேவையை விரிவாக்கம் செய்தது.
திருகோணமலையிலுள்ள எண்ணெய் குதங்களையும் ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக் கொள்ள முயற்சித்தது.

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு அடிக்கடி வருகை தந்து ஆலோசனை நடாத்தினர்.

இந்தப் போக்கு அமெரிக்காவுடன் இரகசிய இராணுவ ஒப்பந்தத்திற்கு இலங்கை செல்லுமா? என்ற அச்சத் தையும் இந்தியாவிற்கு ஏற்படுத்தியது.

இன்னோர் புறத்தில் பிரித்தானியாவின் கினிமினிசேவை அமைப்பின் படைநிபுணர்களும் அதிரடிப்ப டைகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்கினர்.

பாகிஸ்தானின் விசேட படைப்பிரிவும் படையினருக்கு விசேட பயிற்சிகளை வழங்கியது. கருஞ்சிறுத்தைகள் என்ற அதிரடிப் படைப் பிரிவும் பாகிஸ்தான் ஆலோச னையில் உருவாக்கப்பட்டது.

இவ்வாறு இந்திய நலன்களுக்கு விரோதமான சக்திகள் இலங்கை யின் காலூன்றுவது தனது தேசியப் பாதுகாப்பிற்கும், புவியியல் – கேத்திர நலன்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என இந்தியா கருதியது.

இந்தியத் தலையீட்டிற்கு பிரதான காரணம் இவைதான். 1983 ஆம் ஆண்டு கறுப்பு யூலை அழிவுகளும், அதன் விளைவாக தமிழ் நாட் டில் ஏற்பட்ட கொந்தளிப்பு களும் தலையிடுவதற்கானகளச் சூழலை உருவாக்கின.

இந்திரா காந்தி

அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி தமிழ் விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதங்களும், பயிற்சியும் கொடுப்பது எனத் தீர்மானித்தார். இதன் நோக்கம் தமிழர்களுக்கு தமிழீழத்தைப் பெற்றுக் கொடுப்பதல்ல.

மாறாக ஜே.ஆரைப் பணியவைத்து இலங்கையை இந்தியாவின் செல்வாக்கின் கீழ் கொண்டு வருவதே! இலங்கையைப்பணியவைப்பதற்காக தமிழ்ப் பிராமணரான கோபால
சாமி பார்த்த சாரதி மத்தியஸ் தராக நியமிக்கப் பட்டார்.

இந்திய உளவுப் பிரிவினூடாக தமிழ் இயக்கங்களுடன் தொடர்புபட்டு ஆயுதமும், பயிற்சியும் வழங்கப்பட்டது.

முதலில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் புளட் இயக் கங்களுக்கும் பின்னர் புலிகளுக்கும் வழங்கப்பட்டது.

இந்நடவடிக்கைக ளுக்கு பொறுப்பாக உளவுப்பிரிவைச் சே ர்ந்த ஆர்.என்.ராவ், கிரிஸ்சக்சேனா, சங்கரன் நாயர் என்போரைக் கொண்ட குழு வையும் இந்திரா காந்தி உருவாக்கினார்.

இவ்மூவரும் இந்திராகாந்தியின் மிகுந்த நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தனர். இந்திரா காந்தியின் முயற்சியினால் இலங்கைப் படைகளுக்கு எதிரான

இயக்கங்களின் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கின. வல்வெட்டித்துறை நெடுங்காடு தாக்குதல், ஒட்டுசுட்டான் காவல் நிலையத் தாக்குதல், பொலி கண்டி தாக்குதல்கள், வெள்ளாங்குளத் தாக்குதல்கள்,

வல்வெட்டித்துறை காவல் நிலையத் தாக்குதல்கள், கரவெட்டித் தாக்குதல் என ஒரு மாதத்திலேயே பல தாக்குதல்கள் இடம் பெற்றன. ஜே.ஆர் அரசாங்கம் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறியது.

இந்த தீவிர சூழ்நிலையில் தான் 1984ஆம் ஆண்டு ஐப்பசிமாதம் 31ஆம் திகதி இந்திராகாந்தி தனது சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனால் முன், பின் அனுபவமில்லாத ராஜீவ் காந்தி பதவிக்கு வந்தார். இந்திரா காந்தியின் மரண நிகழ்வுக்கு வந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா இந்தியாவிற்கு அடங்கிப் போவதற்கான சைகையை நேரடியாகவே ராஜீவ் காந்தியிடம் காட்டினார்.

இந்தியா எதிர்பார்த்ததும் இதுதான். இதன் பின்னர் இந்தியா விடுதலை இயக்கங்களை அடக்கத் தொடங்கியது.

விடுதலை இயக் கங்களுக்கு அதிக விருப்பம் இல்லாத நிலையிலேயே திம்பு மாநாட்டிற்கு ஏற் பாடு செய்தது.

இந்திய உளவுப்பிரிவைக் கொண்டு கடுமையான அழுத்தங்கள் விடுதலை இயக்கங்களுக்கு கொடுக்கப் பட்டன.

தமது பேரம் பேசும் நிலையை உயர்த்துவதற்காக இலங்கை இராணுவம் பலவீனமாகும் வரை பேச்சு வார்த்தைக்கு செல்வதை விடுதலை இயக்கங்கள் விரும்பியிருக்கவில்லை.

(தொடரும்…)

-அரசியல் ஆய்வாளர் (சி.அ.யோதிலிங்கம்)

Share.
Leave A Reply