கான்பெரா: இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியா நோக்கி சென்றுக் கொண்டிருந்த பயணிகள் விமானத்தில், நடுவானில் பாட்டிலில் பயணிகள் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, ஏர்லைன்ஸ் நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது. இந்தோனேசியாவின் பாலியிலிருந்து வெர்ஜின் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 737 MAX 8 ரக பயணிகள் விமானம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கி நேற்று புறப்பட்டது.

” பொதுவாக விமானங்கள் புறப்படுவதற்கு முன்னர் அனைத்தும் செக் செய்யப்படும். கழிவறை சுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறதா? கழிவறையின் டேங்க் காலியாக இருக்கிறதா? என்பது உட்பட பரிசோதிக்கப்படும்.

பிரிஸ்பேன் புறப்பட்ட விமானத்திலும் இது சோதிக்கப்பட்டிருக்கிறது. சோதனையில் கழிப்பறை பைப்புகளில் அடைப்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது.

ஆனாலும் அதை சரி செய்ய பணியாளர்கள் இல்லை. எனவே, விமானம் அப்படியே திட்டமிட்டபடி டேக் ஆஃப் ஆகியிருக்கிறது.

பாலியிலிருந்து பிரஸ்பேனுக்கு பயணம் நேரம் மொத்தம் 6 மணி நேரம். 4,500 கி.மீ தொலைவுக்கு இந்திய பெருங்கடலை கடந்து போக வேண்டும்.

ஜன்னல் வழியாக பார்க்கும் இடமெல்லாம் வெறும் தண்ணீர் மட்டும்தான் இருக்கும். நீல நிறத்தில் கடலை பார்க்கும்போது நமக்கு இரண்டு விஷயங்கள் தோன்றும்.

ஒன்று தண்ணீர் தாகம் எடுக்கும். இரண்டாவது சிறுநீர் கழிக்க தோன்றும். இந்த விமானத்திலும் இதுதான் நடந்திருக்கிறது.

பயணிகளுக்கு தாகம் எடுத்திருக்கிறது. தண்ணீரை குடித்திருக்கிறார்கள்.

கொஞ்ச நேரம் கழித்து அவர்களுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருந்திருக்கிறது. எனவே கழிவறைக்கு சென்றிருக்கிறார்கள்.

அங்கு போன பின்னர்தான் தெரிந்திருக்கிறது கழிவறை பைப்பில் அடைப்பு இருப்பதால் அது வேலை செய்யவில்லை என்று. 6 மணி நேர பயணித்தில் முதல் மூன்று மணி நேரம் தாக்கு பிடித்த பயணிகளால் அடுத்த மூன்று மணி நேரம் தாக்குபிடிக்க முடியவில்லை.

நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைய தொடங்கியிருக்கிறது. விமானத்தை பாதியில் வேறு எங்கும் தரையிறக்க முடியாது. ஏனெனில் விமானம் கடலுக்கு மேல் பறந்துக்கொண்டிருக்கிறது.

இதனையடுத்து பாட்டிலில் சிறுநீர் கழித்துக்கொள்ளுமாறு விமான பணியாளர்கள் கூற, அவசரத்தை அடக்க முடியாத பயணிகள் அதையே செய்திருக்கின்றனர்.

அவசரத்தில் அண்டாவில் கைவிட்டாலே சரியாக நுழையாது, இதில் பாட்டிலில் எப்படி சரியாக சிறுநீர் கழிக்க முடியும்?

எனவே விமானத்தின் தரையில் சிறுநீர் சிந்தி, விமானம் முழுவதும் துர்நாற்றம் வீசியிருக்கிறது. மூன்று மணி நேரமாக மூக்கை மூடிக்கொண்டு பயணிகள் ஒரு வழியாக பிரிஸ்பேன் வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

ஆண்கள் கூட ஒரு பக்கம் அட்ஜெஸ்ட் செய்துக்கொண்டார்கள். ஆனால் பெண்களால் முடியவில்லை.

குறிப்பாக வயதான பெண்கள் ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார்கள். எப்போடா விமானம் தரையிறங்கும் பல்லை கடித்துக்கொண்டு காத்திருந்திருக்கிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து விமான நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது. போதுமான பணியாளர்கள் இல்லாததால்தான் இதுபோன்று நடந்தது என்றும், சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், பயண டிக்கெட்டுக்கான தொகையை திருப்பி கொடுப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

 

Share.
Leave A Reply