-59க்கும் மேற்பட்ட சிறுவர்கள் எங்கே?-
-உண்மையை கண்டறிய உதவுங்கள் – ஐ.நாவுக்கு மகஜர்-
2009ம் ஆண்டு இறுதிப் போரில் சுமார் 1 இலட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் கொல்லப் பட்டும், காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர்,
அதில் 21 ஆயிரம் பேர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின் காணாமல்போ யுள்ளனர். என வடக்கு – கிழக்கு வலிந்து காணா மல் ஆக்கப்பட்டோரின் உறவினர்க ளின் சங்கம் ஐ.நா வுக்கு வழங்கிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட் டுள்ளது.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி யைகோரி செம்மணியில் இடம்பெற்ற போராட்டத்தின் நிறைவில் ஐ.நா மனித உரிமை கள் ஆணையாள ருக்கான மகஜர் நல்லூரில் உள்ள ஐ.நா அலுவலகத் தில் கையளிக்கப்பட்டது.
குறித்த அறிக்கையிலே யே மேற்படி விட யம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உள்ளக விசாரணை பொறிமுறையை முற்றாக நிராகரித்து சர்வதேச நீதிப் பொறிமுறையினையே நாம் கோருகின்றோம்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் உலகளவில் அதிக காணாமல்போனவர்களை கொண்ட ஒரு நாட்டில் நீதிக்காக உறுதியாக போராடி வருவதுடன், நீதியை நிலைநாட்டுமாறுசர்வதேச சமூகத்தை கேட்டுக் கொள்கிறோம்.
ஈழத்தைப் பொறுத்தவரையில், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் முள்ளிவாய்க்காலில் ஆரம் பிக்கவில்லை.
எமது உரிமைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டே இலங்கை அரசானது ஈழத் தமிழ் மக்களுக்கு எதி ரான திட்டமிட்ட இன ஒடுக்குமுறைக் கருவியாக இதனை பாவித்து வந்துள்ளனர். முள்ளி வாய்க்காலில் உச்சத்தை தொட்டது.
முள்ளிவாய்க்கால் இனப்படு கொலைப் போரின் இறுதிக் கட் டத்தில், 146,679 பேர் கொல்லப்பட்டும் கா ணாமல் ஆக்கப் பட்டும் உள்ளனர்.
படையினரிடம் 21,000க்கும் மேற்பட்டவர்கள் ஒப்படைக்கப்பட்டு பல வந்தமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட் டுள்ளனர். இனப்படுகொலையின் ஒரு வடிவமாக காணாமல் போகச் செய்தல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
போரின் இறுதிக் கட்டத்தில்,59 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இலங்கை அரசாங்கத்திடம்
ஒப்படைக்க ப்பட்டனர், பின்னர் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக் கப்பட்டனர்.
சிறுவர் உரிமைகளை நிலை நிறுத்தவும், இனப்படுகொ லையை வரையறுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள்சபை இலங்கை அரசை திருப்திப்படுத்துவதும் கால அவகாசம் கொடுப் பதும் ஆழ்ந்த வேதனையை அளிக்கின்றது,
வலுக்கட்டாயமாக காணா மல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்களின் கதி என்ன என்பதை இலங்கை அரசு வெளிப் படுத்த சர்வதேச சமூகம் அழுத் தம் கொடுத்து விசாரணைகளை ஆரம்பிக்கவேண் டும்.
போர் முடிவடைந்த பின்னர், பலவந்த மாக காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியலைந்த சுமார் 350க் கும் மேற்பட்டவர்கள் உண்மையிணை அறியாமல் இறந்துபோயுள்ளனர்.
மன்னாரில் செதொசா புதைகுழி யில் 28 சிறுவர்களின் எலும்புக் கூடுகள் உட்பட 3%6 எலும்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
செம்மணி சித்துப்பத்தி புதைகுழி யில் குழந்தைகள் உட்பட 169 பேரின் எலும்புக்கூடுகள் அடை யாளம் காணப்பட்டுள்ளன. திருக் கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து 82 மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கொக்குத்தொடுவாய் மனிதபுதை குழியின் அகழ்வுப்பணி நிறைவடைந்த நேரத்தில் 52 நபர்களின் எச்சங்கள் மீட்கப்பட்டன.
மேற்படி புதைகுழி எவையும் விசாரிக்கப்ப டவில்லை. இலங்கை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 8ம் திகதி A/ HRC/60/21 இலக்கமிட்ட தங்களது அறிக்கை இலங்கையில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சில அடிப்படை பிரச்சி னைகளை குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கடுமையான மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட சர்வதேச போர் குற்றங் களுக்கு நீண்ட காலமாக தாமதித்து வந்த நீதியையும் பொறுப்பு கூறலை உறுதிசெய்ய அரசாங்கத்துக்கு கிடைத்த வரலாற்று வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளு மாறு இலங்கை அரசுக்கு இராஜதந் திர அடிப்படையில் நீங்கள் அழைப்புவிடுத்துள்ளீர்கள்.
பொறுப்புக்கூறல் தொடர்பான தங்களது தமிழ் மக்களாகிய எமக்கு பாரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள து. வருகின்ற 8ம் திகதி செப்ரெம்பர் மாதம் தொடங்கவுள்ள ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் உரியவர்களுக்கு சர்வதேச நீதிப்பொறிமுறை ஊடாக உண்மை கண்டறியப்பட்ட பதில் விரைந்து வழங்குவதுடன்,பாதிக்கப்பட்டோரின் சாட்சியங் களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள்சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திட்டமிட்ட இனப்படு கொலை மேற்கொண்ட இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்திடம் பாரப்ப டுத்தி விசாரனை ஆரம்பிக்க தீர்மானம் நிறைவேற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரை கோருகின் றோம்.என அந்த அறிக் கையில் மேலும கூறப்பட்டுள்ளது.