தேடப்படும் பெண் சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 03 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்ததாக ஐந்து பெண்கள் ரக்வானை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் சந்தேகநபர் தனது வீட்டு முகவரியை விட்டு வெளியேறி தற்போது தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

40 வயதான சந்தேகநபர் ரக்வானை, பொதுப்பிட்டியா வீதி, கந்தகம பகுதியைச் சேர்ந்த தலுகொட ஆராச்சிலாகே ஹர்ஷனி பிரியந்திகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபரைப் பற்றி ஏதேனும் தகவல் அறிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார், பொதுமக்களை கோரியுள்ளனர்.

தொலைபேசி எண்கள் –

ரக்வானை பொலிஸ் நிலையம் – 071 – 8591394

ரக்வானை பொலிஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவு – 071 – 8593808

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு பெண்ணிடம் ரூ. 3 மில்லியன் மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரான பெண்ணையும், கூர்மையான ஆயுதத்தால் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த சந்தேக நபரையும் கைது செய்ய பொலிஸ் தலைமையகம் பொதுமக்களின் உதவி கோருகிறது.

படத்தில் இருக்கும் ஆண், மத்துகம, டோலஹேனவத்தே பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் ஒரு பெண்ணின் கழுத்தை ஏப்ரல் 18 ஆம் திகதி அறுத்த குற்றத்திற்காக தேடப்படும் 41 வயதுடைய பிராமணகே டான் சனத் ரவீந்திர நிலந்த ஆவார் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் தற்போது அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுவிட்டார், அவரை கைது செய்ய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. சந்தேக நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், 071 859 1700 என்ற எண்ணில் மத்துகம உதவி பொலிஸ் கண்காணிப்பாளரை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொள்கிறது.

Share.
Leave A Reply