கொழும்பில் இருந்து யாழ். சென்று கொண்டிருந்த தொடருந்துடன் மோதி பட்டா ரக வானமொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

வவுனியா – மன்னார் வீதியில் அமைந்துள்ள தொடருந்து கடவையின் கதவு மூடாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கதவை மூடும் பணியாளர், கதவை மூடி திறக்கும் அறையில் இருக்கவில்லை என்று மக்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் பட்டா வாகனத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் தந்தை பயணித்துள்ளனர்.

இதன்போது தந்தை வாகனத்திலிருந்து பாய்ந்துள்ளதுடன், வாகனத்திலிருந்த இரு குழந்தைகளும் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply