சீனாவில் இரண்டாம் உலகப்போர் வெற்றி மற்றும் ஜப்பான் சரணடைந்ததன் 80-ஆண்டு நிறைவையொட்டி பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. பெய்ஜிங் நகரில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பை சீன அதிபர் ஜின்பிங்குடன், ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்பட பலநாட்டு தலைவர்கள் பார்வையிட்டனர்.

புதின், ஜின்பிங் மற்றும் கிம் முதல் முறையாக பொதுவெளியில் ஒன்றாக தோன்றியுள்ளனர்.

இந்த அணிவகுப்பில் அதிநவீன போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணைகள், புதிய நீர்மூழ்கி டிரோன்கள் உள்பட சீனாவின் ராணுவ வலிமையை உலகிற்கு பறைசாற்றும் ஆயுதங்களும் ராணுவ தளவாடங்களும் இடம்பெற்றிருந்தன.

ராணுவ அணிவகுப்பின் முடிவில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்
சீன ராணுவ அணிவகுப்பில் நவீன ஆயுதங்கள் இடம் பெற்றிருந்தன
சீனாவின் ராணுவ உலங்கு வானூர்திகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

Share.
Leave A Reply