பாதிக்கப்பட்ட இளம் பெண்களுக்குத் தலைமுடி கொத்துக் கொத்தாக உதிர்வது, தோல் வறட்சி போன்ற குறிகுணங்கள் மன அழுத்தத்தையும் சேர்த்துக்கொடுக்கும்.
;தைராய்டு சுரப்பி – பட்டாம்பூச்சி வடிவிலான அதிமுக்கிய உறுப்பு! முன் கழுத்துப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த உறுப்பு, நம் உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்குக் காரணமாகிறது.
வளர்சிதை மாற்றத்தில் அதிமுக்கிய பங்கு வகிக்கிறது தைராய்டு!
எலும்புகளின் வளர்ச்சி, நரம்புகளின் செயல்பாடு, திசுக்களில் ஆக்ஸிஜன் பரிமாற்றம், உடல் எடை, பல்வேறு உணர்வுகள், அன்றாட செயல்பாடு, இதயத்துடிப்பு… இப்படி பல்வேறு முக்கிய செயல்பாடுகளில் தைராய்டின் பங்கு அதிகம்.
அதாவது கரு உருவாக்கத்திலிருந்து வாழ்நாள் இறுதிவரை தைராய்டு சுரப்பியின் பணி முக்கியத்துவம் பெறுகிறது.
மூளையில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி TSH ஊக்கியைச் சுரக்கச் செய்து தைராய்டு சுரப்பியிலிருந்து T3, T4 ஆகிய ஹார்மோன்களை நெறிப்படுத்துகிறது.
குறை தைராய்டு சுரப்பு (குறைவீதனக் கோளாறு) மற்றும் அதி தைராய்டு சுரப்பு (அதிவீதனக் கோளாறு) என இருவிதமான தைராய்டு சார்ந்த குறைபாடுகள் அன்றாட செயல்பாடுகளில் ஏகப்பட்ட மாற்றங்களைக் கொடுக்கும்.
தைராய்டும் பெண்களும்
பெண்களுக்கு தைராய்டு தொந்தரவு இருப்பின் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு வாய்ப்புகள் மிக மிக அதிகம். மாதவிடாய் தள்ளிப்போவது,
மிகக் குறைந்த அளவில் ரத்தப் போக்கு இருப்பது, அதிகளவில் மாதவிடாய் நிகழ்வது, மாதவிடாய் நடைபெறாமல் இருப்பது… என மாதவிடாய் சார்ந்த சிக்கல்களை உருவாக்கும்.
கருமுட்டை வெளியாவதில் சிக்கல்களை உருவாக்கி குழந்தைப்பேற்றுக்குப் பெரும் தடையாக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் தைராய்டு அளவுகள் சரியான அளவில் இல்லையெனில், கருவின் வளர்ச்சி முழுமையாக இல்லாமல் போகலாம்.
கருச்சிதைவுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். பிறக்கப் போகும் குழந்தைக்கு மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம்.
கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய்க்கு அளிக்கும் முக்கியத்துவம் தைராய்டு பிரச்னைக்கும் கொடுக்கப்படும்.
குழந்தைகளுக்கு இதன் அளவுகள் குறைந்துபோனால் அறிவாற்றல் திறன் பாதிக்கப்படும்.
மெனோபாஸ் காலத்தைப் பல வருடங்களுக்கு முன்பே ஏற்படுத்தி, அத்தருணத்தில் உண்டாகும் குறிகுணங்களின் வீரியமும் அதிகரிக்கும். மெனோபாஸ் காலத்தில் கூடுதல் உடல் சோர்வையும், மனம் சார்ந்த சிக்கல்களையும் உருவாக்கும்.
மெனோபாஸ் குறிகுணங்களோடு தைராய்டு சார்ந்த குறிகுணங்களும் சேர்ந்து கொண்டால் கூடுதல் சிரமம் ஏற்படும்.
உடல் எடை அதிகரிப்பது முதல் முடி உதிர்வு வரை!
உடல் எடை அதிகரித்திருப்பின் எதுக்கும் ஒரு தடவை தைராய்டு அளவை செக் பண்ணிடுங்க…’ என மருத்துவர்கள் சொல்லுமளவுக்கு உடல் பருமனுக்கு முக்கிய காரணமாகிறது.
‘நான் மிகவும் குறைவாகத்தான் சாப்பிடுகிறேன்… ஆனால், உடல் எடை அதிகரித்துக்கொண்டே போகிறது… என்று சொல்பவர்கள் முதலில் தைராய்டு அளவுகளைப் பரிசோதிப்பது நல்லது.
அதிவீதனக் கோளாறாக இருப்பின் உடல் எடை குறையும் பாதிக்கப்பட்ட இளம் பெண்களுக்குத் தலைமுடி கொத்துக் கொத்தாக உதிர்வது,
தோல் வறட்சி போன்ற குறிகுணங்கள் மன அழுத்தத்தையும் சேர்த்துக்கொடுக்கும். மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு என தைராய்டு அளவுகளைப் பொறுத்து குறிகுணங்கள் உண்டாகும். செரிமானம் சார்ந்தும் எக்கச்சக்கமான மாற்றங்கள் நிகழும்.
மேலும், ஒருவரின் உடலின் வெப்பச் சமநிலையை முறைப்படுத்துவது தைராய்டு சுரப்பியின் முக்கிய பணி! அதாவது குளிர் மற்றும் வெப்பத்துக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளும் திறனை நமக்கு வழங்குவது தைராய்டு தான்!
இன உறுப்புகளின் சீரான வளர்ச்சியிலும் தைராய்டு முக்கியப் பங்கு வகிக்கிறது.
மாதவிடாய் ஏற்படும் நேரத்திலும் சரி, திருமண வாழ்க்கையிலும் சரி முறைப்படுத்தப்படாத தைராய்டு பிரச்னை பல பாதிப்புகளை உருவாக்கும்.
இத்தருணங்களில் தைராய்டு சார்ந்த குறிகுணங்கள் வெளிப்பட்டால் கூடுதல் பிரச்னைகளைக் கொடுக்கும்.
அதிகளவில் பதற்றம், மார்பு படபடப்பு, உடல் சோர்வு – இவை தைராய்டு பிரச்னையின் குறிகுணங்கள்.
சிறிது நேரத்திலேயே பெருமளவில் உடல் சோர்வு ஏற்பட்டு ஓய்வுக்காக உடலும் மனமும் ஏங்கும்! சொல்லப்படும் குறிகுணங்களை வைத்தும் மருத்துவரின் பார்வையாலும் குறைவீதனக் கோளாறா அல்லது அதிவீதனக் கோளாறா என்பதை அனுமானித்து விடலாம்.
முன் கழுத்துப் பகுதியில் வீங்கி இருக்கும் தைராய்டு சுரப்பி எச்சிலை விழுங்கும்போதோ அல்லது உணவுகளை எடுத்துக்கொள்ளும்போதோ மேலும் கீழும் அசைவதைப் பார்க்கலாம். கூடவே, தைராய்டு அளவுகளையும் பரிசோதித்துக்கொண்டு அளவறிந்து மருத்துவம் மேற்கொள்ளத் தீவிரம் படிப்படியாகக் குறையும்.
மருந்துகளோடு சேர்த்து இடைவிடாத உடற்பயிற்சி மேற்கொண்டு, ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டால் இயல்பான நிலைக்குத் தாராளமாகத் திரும்ப முடியும் கவனம் செலுத்த வேண்டும்?
T3, T4, TSH ஹார்மோன்கள் – தைராய்டு நோயுடன் என்ன தொடர்பு?
ஹைபோ தைராய்டிசம் என்றால் T3 (ட்ரை-அயோடோதைரோனைன்), T4 (தைராக்சின்) ஆகிய ஹார்மோன்கள் குறையும் என்று பொருள்.
அதே சமயத்தில் TSH (தைரோட்ரோபின்) ஏனும் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும். பிற ஹார்மோன்கள் எவ்வாறு செயலாற்றுகின்றன என்பதை இந்த ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது என்பதால் இது தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (TSH) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.
ஒரு லிட்டர் ரத்தத்தில் 0.5 முதல் 5 மில்லி வரை தைராய்டு இருக்க வேண்டும் என்பது சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.
ரத்தத்தில் டி.எஸ்.ஹெச் அளவு என்பது தைராய்டு சுரப்பி சரியாக இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள உதவும்.
ஆனால் குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என ஆளுக்கு ஆள் இந்த அளவு மாறுபடும். அதாவது வயதைப் பொருத்த வரையில் கூட இந்த அளவு மாறுபடுகிறது.
குடும்பத்தில் யாருக்கேனும் தைராய்டு குறைபாடு இருந்தால் அவர்கள் குழந்தைகளுக்கும் அந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார் மருத்துவர் பரணி.
ஆனால், இதைத் தடுப்பதற்கு எந்த வழிமுறையும் இல்லை. பிரச்னை உண்டான பின்னரே சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும் என்று அவர் கூறுகிறார்.
இது உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியதா?
ஹைப்போ-தைராடிசம் உண்டானால் தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் தைராய்டு சுரப்பியால் அதிகம் சுரக்கப்படும் என்பதால் இதயத்துடிப்பு விகிதத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும். இதன் காரணமாக பல பிரச்னைகள் உண்டாகும்.
இதேபோல ஹைப்போ-தைராய்டிசம் சரியான நேரத்தில் கண்டறியப்படவில்லை என்றால் சில நேரங்களில் மூளையில்கூட பிரச்னை உண்டாகும். அது மட்டுமல்லாமல் உடலில் சோடியம் அளவு குறைந்து பாதிக்கப்பட்ட நபர் கோமா செல்வதற்கும் கூட வாய்ப்புண்டு.
குழந்தைகள் பிறந்த உடனேயே அவர்களுக்கு பிரச்னை இருந்து அது கண்டறியப்படாமல் விட்டால் அவர்களது மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். இதனால், அவர்களது ஐ.க்யூ அளவும் (அறிவாற்றல்) குறையும்.
மிகவும் எளிதாக சிகிச்சை மூலம் குணப்படுத்தக்கூடிய இந்த பிரச்னை கண்டுகொள்ளப்படாமல் விட்டால் குழந்தைகளின் எதிர்காலமே சிக்கலுக்கு உள்ளாகி விடும்.
தைராய்டு பிரச்னை பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளுக்கு உண்டாக வாய்ப்புண்டு.
குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டால் அவர்களது உடல் உயரம் போதிய அளவு இல்லாமல் போகும்.
ஹைப்போ-தைராய்டிசம், ஹைப்பர்-தைராய்டிசம் ஆகியவை சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்காமல்விட்டால் சில நேரங்களில் அவை உயிராபத்தை ஏற்படுத்தக் கூடியவையாக மாறும்.