பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால், உக்ரைனை வலுக்கட்டாயமாக கைப்பற்றுவோம் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை தோற்கடித்ததன் 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனாவில் இடம்பெற்ற மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்ட பிறகு அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி, அமெரிக்க ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதியை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்ததாகக் கூறினார்.

Share.
Leave A Reply