14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சிறுமியின் தாயின் கணவனுக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து குளியாப்பிட்டிய நீதவான் மனோஜ் தல்கொடபிடிய உத்தரவிட்டுள்ளார்.

அதோடு  சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தாயின் கணவனுக்கு எதிராக 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் ஆஜரான பொலிஸார், குற்றம்சாட்டப்பட்டுள்ள தாயின் கணவன் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி குறித்த சிறுமியை ஏமாற்றி காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவித்தனர்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள தாயின் கணவனுக்கு எதிராக நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply