இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் பரிந்துரைக்கப்பட்ட மாகாண சபை யின் அதிகாரங்களும் செயற்பாடுகளும் நிர்வாகத்துறைகளும் தெளிவான முறையில் வரையறுக்கப்படவில்லை.

‘டிசம்பர் 19′ தீர்வு யோசனைகளின் அடிப்படையில் இந்த மாகாண சபை மேலும் திருத்தியமைத்து மேம்பாடு செய்யலாமென ஒப்பந்தத்தில் சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த ‘டிசம்பர் 19’ தீர்வு யோசனைகளின் பல குறைபாடுகள் உள்ளதென சுட்டிக்காட்டிஎமது இயக்கம் ஏற்கனவே அதனை நிராகரித்துள்ளது என்பதையும் பாரதப் பிரதமருக்கு எடுத்துரைத்தேன்.

தமிழீழ மக்களின் தேசிய இனப் பிரச்சனையைப் பொறுத்தமட்டில் தமிழரின் நில உரிமை மிகவும் முக்கியமானது.

இலங்கை தீவின் வடக்கு – கிழக்கு மாகாணங்களைக் கொண்ட தொடர்ச்சியான நிலப்பரப்பில் பெரும்பான்மையான தமிழ் மக்களும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலம் அவர்களது சொந்த நிலம், அவர்களது பாரம்பரிய தாயக நிலம், இந்தத் தாயக நிலத்தைப் பிரிக்கும் எந்த திட்டத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்பதையும் ரஜீவ் காந்தியிடம் எடுத்துரைத்தேன்.

வட கிழக்கு மாகாணங்கள் தனித்த வொரு நிர்வாகப் பிரதேசமாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் இணைக் கப்பட்டிருப்பது ஒரு ஆக்கபூர்வமான சாதனை.

ஆயினும் இந்த இணைப்பு தற்காலிகமானது. இதன் நிரந்தர இணைப்பு பொதுசன கருத்து வாக்கெடுப்புக்கு விடப்படடிருப்பதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

ஏனென்றால், வர்ககெடுப்பில் சிங்கள முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இணைப்பை எதிர்த்து வாக்களித்தால் வட-கிழக்கு நிரந்தரமாக பிளவுபடுவ துடன், தமிழ் தாயகம் காலப் போக்கில் சிதைந்துவிடும் என விளக்கினேன்.

பொறுமையுடன் மௌனமாக எனது கருத்துக்களைக் கேட்டுக் கொண்டிருந்த பிரதமர், அவ்வப்போது குறிப்புக்களை எடுத்தார்.

மாகாண சபைக்கு வழங்கப்பட்டி ருக்கும் அதிகாரப் பரவலாக்கம் மிகவும் வரையறுக்கப்பட்டது என்றும், அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைக ளைப் பூர்த்தி செய்யவில்லை. என்றும் விளக்கினேன்.

வட-கிழக்கு மாகாண சபையைக் கலைத்துவிடும் ஆற்றல் அதிகாரம் இலங்கையின் அரச அதிபர் ஜெயவர்த்தனாவுக்கு வழங்கப்பட் டுள்ளது.

இவர் ஒரு சிங்கள இனவெறியர். தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவார் என நாம் நம்பவில்லை என்று கூறினார் பிரபாகரன்.

இறுதியாக, இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகிய 72 மணி நேரத்திற்குள் எமது விடுதலை இயக்கம் சகல ஆயுதங்களையும் ஒப்படைக்க வேண்டுமென விதிப்பது அநீதியானது.

எத்தனையோ ஆண்டுகளாக இரத்தம் சிந்தி உயிர்களைத் தியாகம் செய்து பெறப்பட்ட ஆயுதங்களை நான்கு நாட்களுக்குள் சரணடையுமாறு ஒப்பந்தம் வற்புறுத்துகிறது.

தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு முன்பாக, தமிழ் மக்களின் பாதுகாப்புக்குத் தகுந்த உத்தரவாதங்கள் பெறுவதற்கு முன்னராக, எமது மக்க ளின் பாதுகாப்புக் கவசமாக விளங்கும் ஆயுதங்களைக் கையளிக்குமாறு வற்புறுத்துவது எவ்வகையிலும் நியாயமா காது என்றார் பிரபாகரன்.

மாகாண சபைத் திட்டம் தற்காலிகமா னது அதன் குறைபாடுகளை பின்னர் நிவர்த்தி செய்ய முயற்சிப்பேன்.

வட- கிழக்கு இணைப்பு தொடர்பாக வாக்கெ டுப்பு நடாத்தப்படாது. அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என ராஜீவ் காந்தி கூறினார்.

இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களின் நலன்களைப் பேணவில்லை மாறாக தமிழ்மக் களின் நலனைப் பாதிக்கின்றது. ஆகவே இந்த உடன்படிக்கையை ஏற்க முடியாது எனத் திட்டவட்டமா கக் கூறினார் பிரபாகரன்.

அவரின் உறுதியைப் புரிந்து கொண்ட ராஜீவ்காந்தி ஒப்பந்தத்தை ஏற்க வேண்டாம் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருங்கள் எனக் கேட்டார்.

மாகாணசபை திட்டம் உடனடியாக வருவது சாத் தியமற்றது அக்கால இடை வெளியில் இடைக்கால அரசை உருவாக்கலாம்.

அதில் உங்கள் இயக்கம் பிரதான பாத்திரத்தை வகிக்கலாம் இது விடயத்தில் உங்களு டன் இரகசிய உடன்பாடு செய்யவும் தயாராக இருக்கின்றேன் என்றும் கூறினார் ராஜீவ்காந்தி.

இடைக்கால நிர்வாகத்தில் விடுதலைப் புலிகளுக்கு பெரும்பான்மைப் பிரதிநிதித்துவம் வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட் டது.

சகல தமிழ் இயக்கங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என ராஜுவ் வேண்டினார். பிரபாகரன் அதனை ஏற்கவில்லை.

இறுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், ஈரோஸ் அமைப்பிற்கும் குறைந்த அளவில் பிரதிநிதித்துவம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

தமிழ்ப் பகுதிகளில் சிங்களக்குடியேற்றம் நிறுத்தப்படல் வேண்டும் என்றும் தமிழ்ப்பகுதிகளில் சிங்கள அரசாங்கம் காவல் நிலையங்களை திறக்கக் கூடாது என்றும் பிரபாகரன் கேட்டுக் கொண் டார். ராஜீவ் அதற்கும் இணக்கம் தெரி வித்தார்.

ஆயுதக் கையளிப்பு விடயம் தொடர் பில் அனைத்து ஆயுதங்களையும் நீங்கள் கையளிக்கத் தேவையில்லை. உங்களது படையணியையும் கலைக்கத் தேவையில்லை நல்லெண்ண சமிக்ஞையாக சிறுதொகை ஆயுதங் களை கையளித்தால் போதும் என்
ராஜீவ்காந்தி குறிப்பிட்டார்.

அருகில் இருந்த பண்குட்டி இராமச்சந்திரன் இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப் பட்ட பழுதடைந்த ஆயுதங்களைக் கையளித்தால் போதும் என்றார்.

இந்தியாவிடமிருந்து பெற்ற ஆயுதங்கள் எல்லாம் பழுதடைந்தவை தான் எனக் கிண்டலாக இராமச்சந்திரனுக்கு பதில் அளித்தார் பிரபாகரன்.

அதிகாலை இரண்டு மணிக்கு ராஜீவ்காந்தியுட னான சந்திப்பு முடிந்தது. சந்திப்பு முடியும் தறுவாயில் பிரதமர் கூறிய வாக்குறுதிகளை எழுத்தில் வரைந்து இருதலைவர்களும் கைச்சாத்திட்டால்  என்ன? என அன்ரன் பாலசிங்கம் பன்ருட்டி இராமச்சந்திர னிடம்
கேட்டார்.

நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை வாக்குறு திகளை கட்டாயம் நான் நிறைவேற்றுவேன் இது எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கட்டும் என்றார் ராஜீவ்காந்தி.

பிரபாகரனை உடனடியாக யாழ்ப் பாணம் அனுப்புவதற்கு ஒழுங்கு செய்வதாகவும் ராஜீவ்காந்தி உறுதியளித்தார்.

சந்திப்பு முடிவடையும் போது அதி காலை 2 மணி. ராஜீவ் காந்தி உற்சாகத்துடனேயே இருந்தார். அடுத்த நாள் அதிகாலை 9 மணிக்கு புதுடில்லியிலி ருந்து அவர் கொழும்பு செல்ல வேண் டும்.

பிற்பகல் 3 மணிக்கு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட ஏற்பா டாகியிருந்தது. விடுதிக்கு
சென்ற பின் இரகசிய ஒப்பந்தமும் வாக்குறுதிகளும் நிறைவேறப் போவதில்லை.

இதெல்லாம் அரசியல் ஏமாற்று வித்தை எனப் பிரபாகரன் கூறினார். அடுத்தநாள் 1987 ஆடி 29 ஆம் திகதி கொழும்பில் வைத்து இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது.

இலங்கை அரசு சார்பில் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும், இந்திய அரசு சார்பில் ராஜீவ்காந்தியும் ஒப்பந்தத் தில் கைச்சாத்திட்டனர். பிரதமர் பிரேமதாச ஒப்பந்தத்தை எதிர்த் தார்.

போராட்டங்களும் கொழும் பில் இடம்பெற்றன. ஒப்பந்தம் முடிவடைந்து படையினரின் அணிவகுப்பு மரியாதையின் போது கடற்படைச் சிப்பாய் ஒருவர் துப்பாக்கியின் பின்பக்கத் தால் ராஜீவ்காந்தியைத் தாக்கி னார்.

உடனடியாகவே செயற் பட்ட ராஜீவின் பாதுகாவலர்கள் ராஜீவ்காந்தியை பாதுகாப்பாக புதுடில்லி கொண்டு சென்றனர்.

இலங்கை இன முரண்பாட்டில் சம்பந் தப் பட்டவர்கள் தமிழர்களும், சிங்களவர்களுமே. அவ்விருதரப்பின் தலைவர்களுமே. ஓப்பந்தத்தில் கைச் சாத்திட்டிருக்க வேண்டும்.

இந்தியா அதனை மீறியது தானே ஒப்பந்தத் தில் கைச்சாத்திட்டது. இதன் மூலம் தமிழர்களின் பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டது. இறுதியில் அந் தப் பொறுப்பு விடயத்திலும் இந்தியா ஒழுங்காகச் செயற்படவில்லை.

(தொடரும்…)

அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்

பயன்களைத் தராத இலங்கை – இந்திய ஒப்பந்தம்! -(பகுதி 2)

பயன்களை தராத இலங்கை- இந்திய ஒப்பந்தம்! -(பகுதி1)

Share.
Leave A Reply