அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார். இதற்காக, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் காலக்கெடுவை அவர் விதித்துள்ளார்.
செங்கோட்டையன் விதித்துள்ள காலக்கெடு அதிமுக, அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழக அரசியலிலும் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அதுதொடர்பாக அடுத்தடுத்து பல தலைவர்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.