நுவரெலியா – வட்டவளை பிரதேசத்தில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்றுள்ளது.

கம்பளையிலிருந்மு ஹட்டன் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் தாய் , தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் காயமடைந்துள்ள நிலையில் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply