நியூசிலாந்தில் நபரொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று அதிகாலை(8) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் நான்கு ஆண்டுகளாக தனது மூன்று பிள்ளைகளுடன், தலைமறைவாக இருந்து வந்த கொள்ளை சம்பவங்களின் குற்றவாளியே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று அதிகாலை நடந்த ஆயுதமேந்திய கொள்ளை சம்பவம் ஒன்றின்போது, பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலின்போதே கொல்லப்பட்டார்.

எனினும், சம்பவ நேரம் அவருடன் இருந்த ஒரு பிள்ளைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதன்போது அந்த பிள்ளையை தமது பொறுப்பில் எடுத்த பொலிஸார், ஏனைய இரண்டு பிள்ளைகளையும் தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் குறித்த நபர் தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நியூசிலாந்தின் கவனத்தை ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply