குருணாகல் மெல்லகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொபேய்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (07) மாலை இடம்பெற்ற சம்பவத்தில் , மெல்லகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய திருமணமாகாத நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.