விழாக்கள் மற்றும் முக்கிய தினங்களில் வான் விளக்குகளை (SKY LANTERNS) பறக்க விடுவதால் பல ஆபத்துக்கள் ஏற்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வானத்தில் பறக்க விடப்படும் வான் விளக்குகள் தீப்பற்றி எரிவதாலும், வீடுகள் மற்றும் பொதுமக்கள் மீது விழுவதாலும்  விபத்துக்கள் ஏற்படலாம்.

சில சந்தர்ப்பங்களில் வானத்தில் பறக்க விடப்படும் வான் விளக்குகள் எரிவாயு நிலையங்கள், எரிபொருள் நிலையங்கள் மற்றும் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மீது விழுவதால் பாரியளவிலான விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கொழும்பு காலி முகத்திடலில் இத்தகைய வான் விளக்குகள் அடிக்கடி பறக்க விடப்படுகிறது.

எனவே பொதுமக்கள் மிகவும் கவனமாகவும் பொறுப்புணர்வுடனும் வான் விளக்குகளை பறக்க விடுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share.
Leave A Reply