கணவர் வெளியூர் சென்றதாக நினைத்து கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை ஆத்திரத்தில் கணவர் இருவரின் தலைகளை கொடுவாளால் வெட்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவருக்கு ஏற்கெனவே கலியம்மாள் என்பவருடன் திருமணமாகி 5 குழந்தைகள் இருந்தது. இதில் 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் கலியம்மாள், தனது 3 குழந்தைகளுடன் கணவர் கொளஞ்சியை பிரிந்து சென்று விட்டார்.
இதையடுத்து, கொளஞ்சி, நாட்டார்மங்கலத்தை சேர்ந்த லட்சுமி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், கொளஞ்சியின் வீட்டு மொட்டை மாடியில் வியாழக்கிழமை (11) காலை லட்சுமியும், 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளனர்.
அதன்பேரில் கள்ளக்குறிச்சி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, இறந்து கிடந்தவர்களின் சடலங்களை பார்வையிட்டு விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
அப்போது இறந்து கிடந்த ஆண் அதே பகுதியை சேர்ந்த தங்கராசு என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில் தங்கராசுவுக்கும், லட்சுமிக்கும் இடையே பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.
இதற்கிடையே கொளஞ்சி வேலை காரணமாக வெளியூர் செல்லும்போது . லட்சுமியும், தங்கராசுவும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் வியாழக்கிழமை (11) இரவு கொளஞ்சி வெளியூர் செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு அருகில் உள்ள இடத்தில் மறைந்து கொண்டார்.
தனது கணவர் வெளியூர் சென்றதான நினைத்த லட்சுமி, தனது கள்ளக்காதலன் தங்கராசுவை செல்போனில் அழைத்து இரவில் இருவரும் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.
அப்போது உல்லாசமாக இருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த கொளஞ்சி கொடுவாளால் தங்கராசுவை வெட்டியுள்ளார். லட்சுமியையும் சரமாரியாக வெட்டினார். இந்த தாக்குதலில் இருவரும் இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர்.
இருப்பினும் ஆத்திரம் தீராத கொளஞ்சி, இருவரின் தலைகளையும் கொடுவாளால் அறுத்து எடுத்து பஸ் மூலம் வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு சென்று சரண் அடைந்துள்ளார்.