கைது செய்யப்பட்டவர் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார்.
பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தை பகுதிக்கு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி முச்சக்கரவண்டியில் சென்ற இனந்தெரியாத இருவர், இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு மீண்டும் வீடு நோக்கிக் கொண்டிருந்திருந்த இரு இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி பிலியந்தலையில் உள்ள போகுந்தர பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் வைத்து கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு உடந்தையாக இருந்த சந்தேக நபர் ஒருவர் பிலியந்தலை – பெலென்வத்த பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல்மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.