நீதிமன்ற சேவையின் செயற்பாடுகளை மேம்படுத்தி பொதுமக்களுக்கு வினைத்திறனான நீதிமன்ற சேவையை வழங்கும் நோக்கில் நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக உயர்நீதிமன்ற நடவடிக்கைளை டிஜிட்டல்மயமாக்கும் ‘இலத்திரனியல் நீதிமன்றம்’கருத்திட்டத்தில் முதல் நடவடிக்கையாக உயர்நீதிமன்றத்தின் வழக்கு முகாமைத்துவ கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் நவீனமயப்படுத்தப்பட்ட வலையமைப்பை திறந்து வைத்தல் நிகழ்வு பிரதம நீதியரசர் பி.பி சூரசேனவின் தலைமையில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பங்குப்பற்றலுடன் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு 12. நீதிமன்ற மாவத்தை இலக்கம், 80 நீதிபதி பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
இந்த புதிய கட்டமைப்பை பிரதம நீதியரசர், நீதிச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களான உயர்நீதிமன்ற நீதியரசர் மஹிந்த சமயவர்தன, உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராசா ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல்நீதிமன்றம், மாவட்ட நீதமிமன்றம் உட்பட நீதிமன்ற கட்டமைப்பை நவீனமயப்படுத்தும் செயற்திட்டத்தை வெகுவிரைவில் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.