யாழில் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக 11ஆம் திகதி வியாழக்கிழமை பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் நவக்கிரி பகுதியில் மின்னல் தாக்கியதில் தானையா புவனேஸ்வரன் என்பவருடைய தோட்டத்தில் உள்ள மோட்டர் அறை, மோட்டர், மின்சார இணைப்பு என்பவன் முற்றாக சேதமடைந்துள்ளன.

அத்துடன் அவருடைய 52 வாழை மரங்களும் அழிவடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply