திவுலப்பிட்டிய பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு இலத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா – திவுலப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள பிரபல  பாடசாலைகளில் உள்ள மாணவர்களை இலக்கு வைத்து இலத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை செய்துவந்த பெண் ஒருவர் திங்கட்கிழமை (15)  திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.  பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து திவுலப்பிட்டியவில்  உள்ள பாடசாலை ஒன்றின் அருகில் வைத்து மேற்படி சந்தேகநபரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

கைதான பெண் 32 வயதுடைய கம்பஹா – வெயாங்கொடை பகுதியை சேர்ந்தவராவார்.  மேலும் சந்தேகநபர் நீண்ட காலமாக இலத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை செய்துவந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 5500  முதல்7000 ரூபா வரை இலத்திரனியல் சிகரட்டுகளை அவர் விற்பனை செய்துவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெளிநாட்டில் உள்ள அவரது கணவர் மூலம் இவ்வகையான சிகரட்டுகளை அவர் பெற்றுக் கொண்டுள்ளார். இதேவேளை சந்தேகநபர் தொடர்பில்  திவுலப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply