இலங்கையில் இதுவரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர்களில் மக்கள் மனதில் இடம்பிடித்த ஜனாதிபதியாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உள்ளார்.
அவரது எளிமையும், நேர்மையும் இலங்கை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இம்மாத தொடக்கத்தில் ஜனாதிபதி அனுர குமார வடக்கிற்கு விஜயம் செய்ததுடன் , பலவேரு நலத்திட்டங்களையும் ஆரம்பித்து வைத்திருந்தார்.
வழமையாக நாட்டின் முன்னைய ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்தால் பெரும் அமர்களப்படுத்தி வருவார்கள்.
அவர்கள் அமர குசன் கதிரைகள் , பாதுகாப்பு என அல்லோலகல்லோலப்படும் . மரம் நடுகை என்றால் கூட அவர்கள் நடக்கும் பாதைகளுக்கு கம்பளம் விரித்து அலங்கரிக்கப்படும்.
ஆனால் மக்களின் ஜனாதிபதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அனுர குமார திசாநாயக்க நல்லதொரு எடுத்துக்காட்டாக உள்ளார். அவரது எளிமை இலங்கை மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் யாழில் தங்கியிருக்கையில் , மிகவும் எளிமையாக அமர்ந்து ஜனாதிபதி அனுர உணவு உண்னும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.