பிரிட்டனுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு, பக்கிங்ஹாம் அரண்மனையில் பிரித்தானிய அரச குடும்பத்தினர் பிரமாண்டமான அரச விருந்து அளித்துள்ளனர்.

விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபத்தில், 155 அடி நீளமுள்ள மேசை அமைக்கப்பட்டது. இந்த மேசை முழுக்க, வெள்ளிப் பாத்திரங்கள், தங்க நிறத்திலான பொருட்கள், மற்றும் மெழுகுவர்த்தி அலங்காரங்கள் இடம்பெற்றிருந்தன.

விருந்திற்காக பிரிட்டன் இராணுவத்தின் பாதுகாப்புப் பிரிவினர், அரண்மனையின் ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.

ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு அளிக்கப்பட்ட இந்த வரவேற்பு, அமெரிக்கா – பிரிட்டன் இடையிலான வலுவான உறவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply