அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அதிவேக நெடுஞ்சாலையில் கெண்டலந்த பகுதியில், கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஹோமாகம பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய நபரே உயிரிழந்தவர் ஆவார்.
சடலம் பலப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.