அனுராதபுரம் பிரதான வீதியில் புதிய பேருந்து தரிப்பிடத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

கார் ஒன்று வீதியில் இருந்த யாசகர் மீது மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த யாசகர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply