குருணாகல், தேவலேகம பொலிஸ் பிரிவின் பட்டுவத்த பகுதியில், தனது மனைவி மற்றும் மகனை ஒருவர் கொடூரமாக தாக்கியதில் மகன் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த மனைவி கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கொல்லப்பட்ட நபர் பட்டுவத்த ஹலமட பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஆவார்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், குடும்ப தகராறு காரணமாக நேற்று இரவு தடியால் தாக்கப்பட்டு இந்தக் கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சடலம் மீதான நீதவான் விசாரணை நடத்தப்பட உள்ளது. அத்துடன், தேவலேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply