தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு, கொலை முயற்சிக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜுலை மாதம் 24ஆம் திகதி குறித்த கொலை முயற்சி சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கல்கிஸ்ஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்தது.

அதற்கமைய, திங்கட்கிழமை ( செப்டம்பர் 22 ) குறித்த குற்றத்திற்கான துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை வழங்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்த வீதி பகுதியில் கல்கிஸ்ஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கல்கிஸ்ஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Share.
Leave A Reply